முகப்பு /செய்தி /விளையாட்டு / ‘டூப்ளசிஸ் பின்னால் நின்று அவரைப்போவே பாவனை செய்த விராட் கோலி’ - லைக்சை அள்ளும் வீடியோ

‘டூப்ளசிஸ் பின்னால் நின்று அவரைப்போவே பாவனை செய்த விராட் கோலி’ - லைக்சை அள்ளும் வீடியோ

டூப்ளசிஸ் போன்று பாவனை செய்யும் கோலி.

டூப்ளசிஸ் போன்று பாவனை செய்யும் கோலி.

ஐபிஎல் பாயின்ட்ஸ் டேபிளில் பெங்களூரு அணி 8 போட்டிகளில் விளையாடி 4 போட்டிகளில் வெற்றி பெற்று 8 புள்ளிகளுடன் 5 ஆவது இடத்தில் உள்ளது.

  • Last Updated :
  • Tamil Nadu, India

பயிற்சியின் போது பெங்களூரு அணியின் டூப்ளசிஸ் போலவே கேப்டன் விராட் கோலி பின்னால் நின்று நடித்துக் காட்டினார். இந்த கியூட்டான வீடியோ சமூக வலைதளங்களில் லைக்ஸை அள்ளி வருகிறது. ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் கேப்டனாக ஃபாஃப் டூப்ளசிஸ் செயல்பட்டு வந்த நிலையில் தற்போது அந்த பொறுப்பை அணி நிர்வாகம் விராட் கோலியிடம் அளித்துள்ளது. விராட் கோலி தலைமையில் 3 போட்டிகளில் விளையாடியுள்ள பெங்களூரு அணி 2 போட்டிகளில் வென்றுள்ளது.

ஐபிஎல் பாயின்ட்ஸ் டேபிளில் பெங்களூரு அணி 8 போட்டிகளில் விளையாடி 4 போட்டிகளில் வெற்றி பெற்று 8 புள்ளிகளுடன் 5 ஆவது இடத்தில் உள்ளது. இன்னும் 6 போட்டிகள் மட்டுமே மீதம் உள்ள நிலையில் குறைந்தது 5 போட்டிகளிலாவது வெற்றி பெற்றால் மட்டுமே ப்ளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பை பெங்களூரு அணி பெறும். இதற்கிடையே பெங்களூரு அணியின் பேட்டிங் மற்றும் பவுலிங் இரண்டுமே பலவீனமாக காணப்படுகிறது. பேட்டிங்கில் கோலி, டூப்ளசிஸ் மற்றும் மேக்ஸ்வெல்லை தவிர்த்து மற்றவர்கள் ரன் குவிக்க தவறியுள்ளனர்.

இந்நிலையில் பெங்களூரு அணியின் பயிற்சியின்போது டூப்ளசிஸிற்கு பின்னால் நின்று கொண்டு அவரைப் போலவே விராட் கோலி பாவனை செய்துள்ளார். இது தொடர்பான கியூட்டான வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் லைக்ஸை அள்ளி வருகிறது.

First published:

Tags: IPL, IPL 2023