முகப்பு /செய்தி /விளையாட்டு / கிறிஸ் கேல், ஏபி டிவில்லியர்ஸை கவுரவித்த ஆர்.சி.பி. – ரசிகர்கள் பாராட்டு!!

கிறிஸ் கேல், ஏபி டிவில்லியர்ஸை கவுரவித்த ஆர்.சி.பி. – ரசிகர்கள் பாராட்டு!!

ஏ.பி. டிவில்லியர்ஸ் - கிறிஸ் கேல்

ஏ.பி. டிவில்லியர்ஸ் - கிறிஸ் கேல்

வெஸ்ட் இண்டீஸ் அணியின் முன்னாள் நட்சத்திர ஆட்டக்காரர் கிரிஸ் கேல் 2011 முதல் 2017 வரை 7 சீசனங்களில் ஆர்.சி.பி. அணிக்காக விளையாடியுள்ளார்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

கிறிஸ் கேல் மற்றும் ஏபி டிவில்லியர்ஸ் ஆகியோரை ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி கௌரவித்துள்ளது. இது தொடர்பாக அந்த அணி வெளியிட்டுள்ள சமூக வலைதள பதிவு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்று வருகிறது. அணியின் இந்த நடவடிக்கையை ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர். விராட் கோலி, கிறிஸ் கேல், ஏபி டிவில்லியர்ஸ் உள்ளிட்ட திறமையான ஆட்டக்காரர்கள் அணியிலிருந்தும் கூட ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி ஒருமுறை கூட ஐபிஎல் கிரிக்கெட் தொடரை வென்றது கிடையாது.

இது ஒரு பக்கம் விமர்சனத்தை ஏற்படுத்தி வந்தாலும், ரசிகர்கள் தொடர்ந்து அணிக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர். ஆர்.சி.பி அணியில் டிவில்லியர்ஸ் கடந்த 2011 - 21 ஆண்டுகளில் 11 சீசன்களில் தொடர்ந்து விளையாடி உள்ளார். மொத்தம் 156 ஆட்டங்களை ஆர்.சி.பி. அணிக்காக விளையாடியுள்ள ஏ.பி. டிவில்லியர்ஸ் 4,491 ரன்களை குவித்துள்ளார். இவற்றில் 37 அரைச்சதங்களும், 2 சதங்களும் அடங்கும். 2015ல் அவர் எடுத்த 123 ரன்கள் அதிகபட்ச ஸ்கோராக உள்ளது. இந்நிலையில் கடந்த 2021 நவம்பர் மாதம் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக ஏ.பி. டிவில்லியர்ஸ் அறிவித்தார்.

இதேபோன்று வெஸ்ட் இண்டீஸ் அணியின் முன்னாள் நட்சத்திர ஆட்டக்காரர் கிரிஸ் கேல் 2011 முதல் 2017 வரை 7 சீசனங்களில் ஆர்.சி.பி. அணிக்காக விளையாடியுள்ளார். ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் டிவில்லியர்சுக்கு 17ஆம் நம்பர்ஜெர்ஸியும், கிறிஸ் கேலுக்கு 333 ஆம் நம்பர் ஜெர்சியும் அளிக்கப்பட்டிருந்தன. தற்போது இருவரும் அணியில் இருந்து ஓய்வு பெற்ற நிலையில், அவர்கள் அணிந்த ஜெர்சியின் நம்பருக்கும் ஓய்வு அளிக்கப்படுவதாக ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் நிர்வாகம் அறிவித்துள்ளது. இதன்படி இந்த இரு நம்பர்களும் மற்ற எந்த வீரர்களுக்கும் வழங்கப்படாது என்பது குறிப்பிடத்தக்கது. இது தொடர்பாக பெங்களூரு அணி சமூக வலைதள பக்கங்களில் வெளியிட்டுள்ள அறிவிப்பு ரசிகர்களின் பாராட்டை பற்றி வருகிறது.

First published:

Tags: IPL, IPL 2023