முகப்பு /செய்தி /விளையாட்டு / IPL ப்ளே ஆஃப் சுற்று : பெங்களூரு – ராஜஸ்தான் அணிகளுக்கான வாய்ப்புகள் என்ன?

IPL ப்ளே ஆஃப் சுற்று : பெங்களூரு – ராஜஸ்தான் அணிகளுக்கான வாய்ப்புகள் என்ன?

ராஜஸ்தான் - பெங்களூரு அணிகளின் கேப்டன்கள்

ராஜஸ்தான் - பெங்களூரு அணிகளின் கேப்டன்கள்

பாயின்ட்ஸ் டேபிளில் மும்பை இந்தியன்ஸ், லக்னோ, ராஜஸ்தான், பஞ்சாப் மற்றும் பெங்களூரு அணிகளுக்கு இடையேதான் கடும் போட்டி காணப்படுகிறது

  • Last Updated :
  • Tamil Nadu, India

ஐபிஎல் போட்டிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளா நிலையில், அடுத்த சுற்றான ப்ளே ஆஃபில் விளையாட ராஜஸ்தான் மற்றும் பெங்களூரு அணிகளுக்கான வாய்ப்புகள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம். 10 அணிகள் மோதி வரும் ஐபிஎல் தொடரில் ஒவ்வொரு அணியும் 11-12 போட்டிகளில் விளையாடி முடித்துள்ளன. இதில் 4 வெற்றிகளை மட்டுமே பெற்றுள்ள டெல்லி கேபிடல்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் லீக் சுற்றுடன் வெளியேறுகின்றன. அடுத்ததாக 12 போட்டிகளில் விளையாடி 5 இல் வெற்றி பெற்றுள்ள கொல்கத்தா அணி 10 புள்ளிகளை பெற்று 8 ஆவது இடத்தில் உள்ளது.

கொல்கத்தா அணியும் லீக் சுறறுடன் வெளியேறவுள்ளது. ப்ளே ஆஃப் சுற்றுக்கு 12 போட்டிகளில் விளையாடி 8 போட்டிகளில் வெற்றி பெற்று 16 புள்ளிகளைக் கொண்டுள்ள குஜராத் அணி தகுதி பெற்று விடும். இன்றைய கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் சென்னை அணி வெற்றி பெற்று விட்டால் ஒட்டுமொத்தமாக 17 புள்ளிகளுடன் ப்ளே ஆஃப் சுற்றுக்குள் நுழையும்.

இந்த நிலையில் இடைப்பட்ட இடத்தில் உள்ள மும்பை இந்தியன்ஸ், லக்னோ, ராஜஸ்தான், பஞ்சாப் மற்றும் பெங்களூரு அணிகளுக்கு இடையேதான் கடும் போட்டி காணப்படுகிறது. இந்த 5 அணிகளில் 2 மட்டுமே அடுத்த சுற்றுக்கு முன்னேறும் என்பதால், அடுத்து வரும் ஒவ்வொரு போட்டிகளும் பரபரப்பு நிறைந்தவையாக காணப்படுகின்றன. தற்போது பெங்களூரு மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதி வருகின்றனர். பெங்களூரு தற்போது வரை 11 போட்டிகளில் விளையாடியுள்ள நிலையில் 10 புள்ளிகளைப் பெற்றிருக்கிறது. அடுத்த 3 போட்டிகளில் வெற்றி பெற்றால் மட்டுமே 16 புள்ளிகளுடன் ப்ளே ஆஃப் வாய்ப்பை உறுதி செய்ய முடியும். 12 போட்டிகளில் விளையாடி 6 வெற்றியுடன் 12 புள்ளிகளைப் பெற்றுள்ள ராஜஸ்தான் அணியும் அடுத்து வரும் 2 போட்டிகளில் வெற்றி பெற்றால் மட்டுமே ப்ளே ஆஃப் வாய்ப்பு பிரகாசம் அடையும். அந்த வகையில் தற்போது நடைபெற்று வரும் போட்டியில் எந்த அணி வெற்றி பெறுகிறதோ அந்த அணி அடுத்த சுற்றுக்கு நுழையும் வாய்ப்பை அதிகப்படுத்துவதுடன், எதிரணியை வெளியேற்றும் வாய்ப்பையும் பெறுகிறது.

First published:

Tags: IPL, IPL 2023