முகப்பு /செய்தி /விளையாட்டு / IPL 2023 : பாயின்ட்ஸ் டேபிளில் 4 ஆவது இடத்திற்கு முன்னேற போராடும் 3 அணிகள்…

IPL 2023 : பாயின்ட்ஸ் டேபிளில் 4 ஆவது இடத்திற்கு முன்னேற போராடும் 3 அணிகள்…

வடகிழக்கு இந்தியாவின் முதல் ஐபிஎல்

வடகிழக்கு இந்தியாவின் முதல் ஐபிஎல்

பெங்களூரு, மும்பை, பஞ்சாப் அணிகள் 5 வெற்றிகளுடன் 10 புள்ளிகளைப் பெற்று நெட் ரன்ரேட் அடிப்படையில் முறையே 5, 6 மற்றும் 7 ஆவது இடத்தில் இருக்கின்றன.

  • Last Updated :
  • Tamil Nadu, India

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் பாயின்ட்ஸ் டேபிளில் 4 ஆவது இடத்தை பிடிக்க 3 அணிகள் போராடி வருகின்றன. போட்டிகள் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ள நிலையில் ஒவ்வொரு ஆட்டமும் பரபரப்புக்கு பஞ்சம் இல்லாமல் காணப்படுகிறது. ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இதுவரை 52 ஆட்டங்கள் நடந்து முடிந்துள்ளன. தற்போது கொல்கத்தா மற்றும் பஞ்சாப் அணிகள் மோதும் 53 ஆவது ஆட்டம் கொல்கத்தாவில் நடைபெற்று வருகிறது. பாயின்ட்ஸ் டேபிளை பொருத்தவரையில் குஜராத் டைட்டன்ஸ் அணி இதுவரை விளையாடிய 11 போட்டிகளில் 8 இல் வெற்றி பெற்று 16 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது.

சென்னை அணி 11 போட்டிகளில் விளையாடி6 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. லக்னோ உடனான போட்டியில் முடிவு அறிவிக்கப்படாததால் இரு அணிகளும் தலா 1 புள்ளிகளை பகிர்ந்து  கொண்டன. இதன் அடிப்படையில் சென்னை 13 புள்ளிகளுடன் 2 ஆவது இடத்திலும் லக்னோ 11 புள்ளிகளுடன் 3 ஆவது இடத்திலும் உள்ளது. ராஜஸ்தான் அணி 11 போட்டிகளில் விளையாடி 5 வெற்றிகளுடன் 10 புள்ளிகளைப் பெற்று 4 ஆவது இடத்தில் உள்ளது.

ஐபிஎல் பாயின்ட்ஸ் டேபிள்

இதேபோன்று பெங்களூரு, மும்பை, பஞ்சாப் அணிகள் 5 வெற்றிகளுடன் 10 புள்ளிகளைப் பெற்று நெட் ரன்ரேட் அடிப்படையில் முறையே 5, 6 மற்றும் 7 ஆவது இடத்தில் இருக்கின்றன. இவை 3ம் இதுவரை 10 போட்டிகளில் மட்டுமே விளையாடியுள்ளன. இவற்றில் ஏதாவது ஒரு அணி அடுத்த போட்டியில் வெற்றி பெற்றால் 12 புள்ளிகளைப் பெற்று 3 ஆவது இடத்திற்கு முன்னேறி விடும். தற்போதைய சூழல் குஜராத் மற்றும் சென்னை அணிகள் ப்ளே ஆஃப் சுற்றுக்கு நுழைவதற்கான வாய்ப்புகள் பிரகாசமாக உள்ளன. இவ்விரு அணிகளை தவிர்த்து லக்னோ, ராஜஸ்தான் அணிகள் மீதம் உள்ள 3 போட்டிகளிலும் வெற்றி பெற்றால் ப்ளே ஆஃப் சுற்றுக்கு நுழையலாம். ஒவ்வொரு அணியும் மொத்தம் 14 லீக் போட்டிகளில் விளையாடவுள்ள சூழலில் இனி வரும் ஒவ்வொரு போட்டியும் பாயின்ட்ஸ் டேபிளில் முதல் 7 இடங்களில் இருக்கும் அணிகளுக்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும்.

First published:

Tags: IPL, IPL 2023