முகப்பு /செய்தி /விளையாட்டு / வரலாற்றை மாற்றுமா சென்னை அணி? பிளே ஆப் சுற்றில் நாளை குஜராத் அணியுடன் மோதல்...

வரலாற்றை மாற்றுமா சென்னை அணி? பிளே ஆப் சுற்றில் நாளை குஜராத் அணியுடன் மோதல்...

தோனி - பாண்டியா

தோனி - பாண்டியா

இதுவரை குஜராத் அணியை சென்னை அணி ஒரு முறை கூட வென்றதில்லை. மேலும் சென்னை சேப்பாக்க மைதானத்தில் முதல் முறையாக குஜராத் அணி களமிறங்க உள்ளது. 

  • Last Updated :
  • Chennai, India

சென்னையில் நாளை நடைபெறும் முதலாவது பிளேஆஃப் சுற்றில் குஜராத் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்த உள்ளன.

நடப்பு ஐபிஎல் கிரிக்கெட் தொடரில், லீக் சுற்று போட்டிகள் நேற்றுடன் முடிவுக்கு வந்துள்ளன. புள்ளிப் பட்டியல் அடிப்படையில் குஜராத், சென்னை, லக்னோ, மும்பை ஆகிய 4 அணிகள் பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளன. சென்னை அணி இதுவரை விளையாடிய 14 ஐபிஎல் தொடர்களில் 12-ஆவது முறையும், மும்பை அணி 16 தொடர்களில் விளையாடி 10-ஆவது முறையாகவும் பிளே ஆப் சுற்றுக்குள் நுழைந்துள்ளன. லக்னோ, குஜராத் அணிகள் தொடர்ந்து இரண்டாவது முறையாக பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளன.

நாளை நடைபெறவுள்ள முதலாவது தகுதி சுற்றில் குஜராத், சென்னை அணிகள் சேப்பாக்கம் மைதானத்தில் மோத உள்ளன.

இதில், வெற்றி பெறும் அணி நேரடியாக இறுதி போட்டிக்கு முன்னேறும். இந்த நிலையில் ஐபிஎல் வரலாற்றில்  குஜராத் அணியுடன் இதுவரை 3 முறை மோதியுள்ள சென்னை அணி இதுவரை ஒரு முறை கூட வெற்றி பெறவில்லை இரண்டு போட்டிகளிலும் குஜராத் அணியே வெற்றி பெற்றுள்ளது.

மேலும் சென்னை சேப்பாக்க மைதானத்தில் முதல் முறையாக குஜராத் அணி களமிறங்க உள்ளது.  இதுவரை 9 முறை ஐபிஎல் இறுதி போட்டிக்கு முன்னேறியுள்ள சென்னை அணி நாளைய போட்டியில் வெற்றி 10வது முறையாக முன்னேறும் என ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர். அதுவும் இந்த போட்டி சென்னையில் நடப்பதால் சென்னை அணிக்கு கூடுதல் பலம் என்றே கூறலாம். நாளை மறுதினம் நடைபெறும் எலிமினேட்டர் ஆட்டத்தில், லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதுகின்றன. 

இதையும் படிங்க:‘கிங்’ கோலி சதங்களில் சாதனை.. ஐபிஎல் கிரிக்கெட்டில் கிறிஸ் கெயில் சாதனையை முறியடித்த விராட்!

 இப்போட்டியில் தோற்கும் அணி ஐபிஎல் தொடரில் இருந்து வெளியேற்றப்படும். வெற்றி பெறும் அணி, முதலாவது தகுதி சுற்றில் தோற்ற அணியுடன் மே 26ஆம் தேதி மோத உள்ளது. இதில், வெற்றி பெறும் அணி இறுதி போட்டிக்கு முன்னேறும். வரும் மே 28ஆம் தேதி அகமதாபாத்தில் இறுதிப் போட்டி நடைபெற உள்ளது.

First published:

Tags: CSK, Gujarat Titans, IPL 2023