முகப்பு /செய்தி /விளையாட்டு / ஐபிஎல் இறுதிப் போட்டிக்கு முன்னேறியது சென்னை சூப்பர் கிங்ஸ்… குஜராத் அணியை வீழ்த்தி அபாரம்

ஐபிஎல் இறுதிப் போட்டிக்கு முன்னேறியது சென்னை சூப்பர் கிங்ஸ்… குஜராத் அணியை வீழ்த்தி அபாரம்

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி

சென்னை அணி தரப்பில் சிறப்பாக பந்துவீசிய ரவிந்திர ஜடேஜா 4 ஓவர்கள் வீசி 18 ரன்கள் மட்டுமே கொடுத்து தசுன் ஷனகா மற்றும் டேவிட் மில்லர் என முக்கிய விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

  • Last Updated :
  • Tamil Nadu, India

ஐபிஎல் குவாலிபையர் 1 ஆட்டத்தில் குஜராத் அணியை 15 ரன்கள் வித்தியாசத்தில் வென்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது. இந்த போட்டியில் டாஸ் வென்ற குஜராத் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்ட்யா பவுலிங்கை தேர்வு செய்தார். இதையடுத்து சென்னை அணியின் தொடக்க வீரர்களாக ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் டெவோன் கான்வே ஆகியோர் களத்தில் இறங்கினர். இருவரும் வழக்கம்போல சென்னை அணிக்கு சிறப்பான தொடக்கத்தை கொடுத்தனர். 34 பந்துகளை எதிர்கொண்ட டெவோன் கான்வே 4 பவுண்டரியுடன் 40 ரன்களை எடுத்தார். 1 சிக்சர் மற்றும் 7 பவுண்டரியுடன் 44 பந்துகளை எதிர்கொண்ட ருதுராஜ் கெய்க்வாட் 60 ரன்கள் குவித்தார். இருவரும் முதல் விக்கெட்டிற்கு 87 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர்.

அடுத்து வந்த ஷிவம் துபே 1 ரன் எடுத்த நிலையில் நூர் அகமது பந்துவீச்சில் போல்டாகி வெளியேறினார். அஜிங்யா ரஹானே, அம்பதி ராயுடு ஆகியோர் தலா 17 ரன்கள் எடுத்து வெளியேறினர். கேப்டன் தோனி 1 ரன் எடுத்திருந்தபோது மோகித் சர்மா பவுலிங்கில் ஹர்திக் பாண்ட்யாவிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்த சென்னை அணி 172 ரன்கள் எடுத்தது. இதையடுத்து 173 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி குஜராத் அணி வீரர்கள் களத்தில் இறங்கினர். தொடக்க வீரர் சாஹா 11 பந்தில் 12 ரன்கள் எடுத்து வெளியேற அடுத்து வந்த கேப்டன் ஹர்திக் பாண்ட்யா பொறுப்பற்ற முறையில் விளையாடி 8 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தார்.

இதையும் படிங்க - உலகக்கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடர்… 10 அணிகள் மோதும் தகுதிச் சுற்று அடுத்த மாதம் தொடக்கம்

top videos

    தசுன் ஷனகா 17 ரன்னும், டேவிட் மில்லர் 4 ரன்னும் எடுத்து வெளியேற குஜராத் அணிக்கு அழுத்தம் அதிகரித்தது. விஜய் சங்கர் – ரஷித் கான் இணை அணியை சரிவிலிருந்து மீட்க போராடியது. விஜய் சங்கர் 10 பந்தில் 14 ரன்கள் எடுக்க, ரஷித் கான் 16 பந்துகளில் 30 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். 20 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த குஜராத் அணி 157 ரன்கள் மட்டுமே எடுத்து 15 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. சென்னை அணி தரப்பில் சிறப்பாக பந்துவீசிய ரவிந்திர ஜடேஜா 4 ஓவர்கள் வீசி 18 ரன்கள் மட்டுமே கொடுத்து தசுன் ஷனகா மற்றும் டேவிட் மில்லர் என முக்கிய விக்கெட்டுகளை கைப்பற்றினார். இந்த வெற்றியின் மூலம் வரும் ஞாயிறன்று நடைபெறவுள்ள இறுதிப் போட்டிக்கு சென்னை அணி முன்னேறியுள்ளது.

    First published:

    Tags: IPL, IPL 2023