முகப்பு /செய்தி /விளையாட்டு / IPL 2023 : ஐபிஎல் ப்ளே ஆஃப் சுற்று போட்டிகளின் அட்டவணை… விதிமுறைகள் என்ன தெரியுமா?

IPL 2023 : ஐபிஎல் ப்ளே ஆஃப் சுற்று போட்டிகளின் அட்டவணை… விதிமுறைகள் என்ன தெரியுமா?

ப்ளே ஆஃப் சுற்றில் விளையாடும் அணிகளின் கேப்டன்கள்.

ப்ளே ஆஃப் சுற்றில் விளையாடும் அணிகளின் கேப்டன்கள்.

நடப்பு சாம்பியனான குஜராத் டைட்டன்ஸ் அணி 4 முறை சாம்பியன் பட்டம் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸை நாளை எதிர்கொள்கிறது

  • Last Updated :
  • Tamil Nadu, India

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் ப்ளே ஆஃப் சுற்று போட்டிகள் நாளை தொடங்கவுள்ளன. நேற்று நடந்த பரபரப்பான ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸிடம் தோல்வியடைந்த பெங்களூரு அணி தொடரை விட்டு வெளியேறியது. 16 புள்ளிகளைப் பெற்ற மும்பை அணி ப்ளே ஆஃப் சுற்றில் விளையாடும் வாய்ப்பை பெற்றது. நாளை முதல் தொடங்கவுள்ள ப்ளே ஆஃப் சுற்றுக்கான ஆட்டவணை இதோ….

குவாலிஃபையர் 1 : ப்ளே ஆஃப் சுற்றின் முதல் போட்டியாக குவாலிபையர் 1 நாளை நடைபெறவுள்ளது. இதில் நடப்பு சாம்பியனான குஜராத் டைட்டன்ஸ் அணி 4 முறை சாம்பியன் பட்டம் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸை எதிர்கொள்கிறது. இந்த போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இரவு 7.30 மணிக்கு நடைபெறவுள்ளது. இதில் வெற்றி பெறும் அணி நேரடியாக இறுதிப் போட்டிக்கு செல்லும்.

எலிமினேட்டர் : ப்ளே ஆஃப் எலிமினேட்டர் சுற்றில் பாயின்ட்ஸ் டேபிளில் 3 மற்றும் 4 ஆம் இடத்தை பிடித்த அணிகள் மோதுகின்றன. இதில் தோல்வியடையும் அணி போட்டியில் இருந்து வெளியேறி விடும். சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் வரும் புதன் அன்று இரவு 7.30-க்கு தொடங்கவுள்ள இந்த போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி 5 முறை சாம்பியன் பட்டம் வென்றுள்ள மும்பை இந்தியன்ஸை எதிர்கொள்கிறது. இதில் வெற்றி பெறும் அணி குவாலிபையர் 1-இல் தோல்வியடைந்த அணியுடன் மோதுகிறது.

இதையும் படிங்க - ‘கிங்’ கோலி சதங்களில் சாதனை.. ஐபிஎல் கிரிக்கெட்டில் கிறிஸ் கெயில் சாதனையை முறியடித்த விராட்!

குவாலிபையர் 2 : குவாலிபையர் 1 இல் தோல்வியடைந்த அணியும், எலிமினேட்டர் சுற்றில் வெற்றி பெற்ற அணியும் மோதும். இதில் வெற்றி பெறும் அணி இறுதிப் போட்டிக்கு தகுதி பெறும். இந்த மேட்ச் வரும் வெள்ளியன்று மே 28 ஆம் தேதி இரவு 7.30 மணிக்கு அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெறவுள்ளது.

top videos

    இறுதிப்போட்டி – குவாலிபையர் 1 இல் வெற்றி பெற்ற அணியும், குவாலிபையர் 2 இல் வெற்றி பெற்ற அணியும் இறுதிப் போட்டியில் மோதுகின்றன. இந்த மேட்ச் வரும் ஞாயிறன்று இரவு 7.30 மணிக்கு அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெறுகிறது.

    First published:

    Tags: IPL, IPL 2023