முகப்பு /செய்தி /விளையாட்டு / IPL 2023 : எலிமினேட்டர் சுற்றில் மும்பை – லக்னோ அணிகள் இன்று மோதல்…

IPL 2023 : எலிமினேட்டர் சுற்றில் மும்பை – லக்னோ அணிகள் இன்று மோதல்…

க்ருணல் பாண்ட்யா - ரோஹித் சர்மா

க்ருணல் பாண்ட்யா - ரோஹித் சர்மா

லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியில் நிக்கோலஸ் பூரன், மார்க்கஸ் ஸ்டாய்னிஸ் உள்ளிட்ட பேட்ஸ்மின்கள் நல்ல ஃபார்மல் இருப்பது அணிக்கு பலமாக கருதப்படுகிறது.

  • Last Updated :
  • Tamil Nadu, India

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெறவுள்ள எலிமினேட்டர் சுற்றில், மும்பை இந்தியன்ஸ் அணியை லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் எதிர்கொள்கிறது. இந்த போட்டியில் தோல்வியடையும் அணி தொடரைவிட்டு வெளியேறும் என்பதால் இந்த ஆட்டம் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. எலிமினேட்டர் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்று இரவு 7:30 மணிக்கு தொடங்க உள்ளது. மும்பை மற்றும் லக்னோ அணிகள் சம பலம் மிக்கவை என்பதால், இந்த போட்டி மிகுந்த விறுவிறுப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையே நேற்று நடைபெற்ற குவாலிஃபயர் முதல் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியை, சென்னை சூப்பர் கிங்ஸ் 15 ரன்கள் வித்தியாசத்தில் வென்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.

ஐபிஎல் தொடரின் இறுதி போட்டி அகமதாபாத் மைதானத்தில் வரும் ஞாயிறன்று நடைபெற உள்ளது. மும்பை அணியில் ரோகித் சர்மா, இஷான் கிஷன், சூர்யா குமார் யாதவ், கேமரூன் கிரீன், டீம் டேவிட் உள்ளிட்ட பேட்ஸ்மேன் அணிக்கு வலிமை சேர்க்கின்றனர். அதே நேரம் ஒரு சில பவுலர்களை தவிர மற்றவர்கள் அதிக ரன்களை கொடுப்பதால் மும்பை அணியின் பவுலிங் யூனிட் பலவீனமாக காணப்படுகிறது. லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியில் நிக்கோலஸ் பூரன், மார்க்கஸ் ஸ்டாய்னிஸ் உள்ளிட்ட பேட்ஸ்மின்கள் நல்ல ஃபார்மல் இருப்பது அணிக்கு பலமாக கருதப்படுகிறது.

இதையும் படிங்க - “தோனி கண்ணீர் விட்டு அழுத அந்த இரவு...” - நெகிழ்ச்சி சம்பவத்தை பகிர்ந்த ஹர்பஜன் சிங்

top videos

    இவர்களுடன் கரண் சர்மா, குவின்டன் டி காக், மண்கட் ஆகியோரும் சிறப்பாக விளையாடினால் லக்னோ அணி அதிக ஸ்கோரை எடுக்க இயலும். பந்துவீச்சில் மொஹ்சின் கான், ரவி பிஷ்னோய் கிருஷ்ணப்பா கெளதம் ஆகியோர் நம்பிக்கை அளிக்கின்றனர். ஒட்டுமொத்தமாக பார்க்கும் போது மும்பை அணி லக்னோவை விட வலிமை மிக்கதாக காணப்படுகிறது. அந்த அணிக்கே குவாலிஃபயர் 2 போட்டியில் விளையாடும் வாய்ப்பு அதிகம் இருப்பதாக கருதப்படுகிறது.

    First published:

    Tags: IPL, IPL 2023