கடந்த சில ஆண்டுகளாக கேப்டன்சி செய்துவந்த கேன் வில்லியம்சனை அணியில் இருந்து அனுப்பிவிட்டு தென் ஆப்பிரிக்கா அணி வீரர் எய்டன் மார்க்ரமை கேப்டனாக நியமித்து ஐதராபாத் சன்ரைசர்ஸ் அணி இந்த சீசனில் களமிறங்குகிறது. இந்த சீசனுக்கான மினி ஏலத்தில் மயங்க் அகர்வால் மாதிரியான சிறந்த வீரர்களை ஏலத்தில் எடுத்து வலுவான அணியை கட்டமைத்துள்ளது.
மயன்க் அகர்வால் மற்றும் அபிஷேக் ஷர்மா ஆகிய இருவரும் தொடக்க வீரர்களாக களமிறங்க வாய்ப்புள்ளது. ராகுல் திரிபாதி 3ம் வரிசையிலும், கேப்டன் மார்க்ரம் 4ம் வரிசையிலும் களமிறங்குவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த முறை மினி ஏலத்தில் எடுக்கப்பட்ட இங்கிலாந்து அதிரடி வீரர் ஹாரி ப்ரூக் அந்த அணிக்கு நம்பிக்கை நட்சத்திரமாக உள்ளார்.
க்ளென் ஃபிலிப்ஸ் அல்லது ஹென்ரிச் கிளாசன் ஆகிய இருவரில் ஒருவர் விக்கெட் கீப்பர் ஃபினிஷராக ஆட வாய்ப்புள்ளது. ஸ்பின்னர்களாக ஆல்ரவுண்டர் வாஷிங்டன் சுந்தர் கூடுதல் பலம். வேகப்பந்து வீச்சாளர்களை பொறுத்தவரை புவனேஷ்வர் குமார், உம்ரான் மாலிக் மற்றும் நடராஜன் ஆகிய மூவரும் எதிரணியை மிரட்டுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மார்க்ரம் சமீபத்தில் தென்னாப்பிரிக்காவின் புதிய டி20 கேப்டனாகவும் நியமிக்கப்பட்டார். இதற்கு முன்னதாக SA20 லீக் தொடரில் சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணிக்கு கேப்டனாக இருந்து கோப்பையையும் வென்று கொடுத்துள்ளதால் அந்த அனுபவம் ஐபிஎல் தொடருக்கும் பயனளிக்கும் என கிரிக்கெட் விமர்சகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி:
எய்டன் மார்க்ரம் (கேப்டன்), அப்துல் சமத், ராகுல் திரிபாதி, கிளென் பிலிப்ஸ், அபிஷேக் ஷர்மா, மார்கோ ஜான்சன், வாஷிங்டன் சுந்தர், ஃபசல்ஹக் ஃபரூக்கி, கார்த்திக் தியாகி, புவனேஷ்வர் குமார், டி. நடராஜன், உம்ரான் மாலிக், ஹாரி புரூக், மயங்க் அகர்வால், ஹென்ரிச் கிளாஸ், ஹென்ரிச், ரஷித், மயங்க் மார்கண்டே, விவ்ராந்த் சர்மா, சமர்த் வியாஸ், சன்வீர் சிங், உபேந்திர யாதவ், மயங்க் டாகர், நிதிஷ் குமார் ரெட்டி, அகேல் ஹொசைன், அன்மோல்பிரீத் சிங்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.