ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் சம பலம் மிக்க சிறந்த அணியாக லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் உள்ளது என்று முன்னாள் கிரிக்கெட் வீரரும் வர்ணனையாளருமான வீரேந்தர் சேவாக் கூறியுள்ளார். ஐபிஎல் கிரிக்கெட் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. இந்த வாரத்திற்குள் எந்தெந்த அணிகள் ப்ளே ஆஃப் சுற்றுக்குள் நுழையும் என்பது இறுதி செய்யப்பட்டு விடும். தற்போதைய சூழலில் குஜராத், சென்னை, மும்பை மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் ஆகிய அணிகள் ப்ளே ஆஃப் சுற்றுக்குள் நுழையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அடுத்த மேட்ச்சில் லக்னோ அணி வெற்றி பெற்றால் அந்த அணி ப்ளே ஆஃப் சுற்றுக்குள் நுழைவதற்கான வாய்ப்புகள் அதிகரித்து விடும். இதைத்தவிர்த்து சன்ரைசர்ஸ் ஐதராபாத் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் ஆகிய அணிகள் ஐபிஎல் தொடரில் இருந்து வெளியேறவுள்ளன. இந்த நிலையில் நடப்பு சீசனில் பேட்டிங் மற்றும் பவுலிங் என இரு தரப்பிலும் சம பலம் மிக்க அணியாக லக்னோ சூப்பர் ஜெயன்ட் உள்ளது என்று முன்னாள் கிரிக்கெட் வீரரும் வர்ணனையாளருமான வீரேந்தர் சேவாக் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது-
இந்த கிரிக்கெட் தொடரில் பேட்டிங் பவுலிங் என இரண்டிலும் சம பலம் மிக்க அணியாக லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் உள்ளது. லக்னோ உள்ளூரில் நடந்த போட்டிகளில் தடுமாறினாலும், வெளியூரில் நடந்த ஆட்டங்களில் சிறப்பான திறமையை வெளிப்படுத்தியுள்ளது. கேப்டன் கே.எல்.ராகுல் உள்பட அனைத்து வீரர்களும் இந்த தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி உள்ளார்கள். இவ்வாறு அவர் கூறினார். கிரிக்கெட் ஜாம்பவான் சுனில் கவாஸ்கர் அளித்துள்ள பேட்டியில் பஞ்சாப் அணியின் விக்கெட் கீப்பர் ஜிதேஷ் சர்மா இந்த தொடர் முழுவதும் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளார். குறிப்பாக கடைசி 4-5 ஓவர்களில் பஞ்சாப் அணியின் ஸ்கோர் உயர்வதற்கு உதவியுள்ளார். எனவே ஜிதேஷ் சர்மாவின் பங்களிப்பை யாரும் குறைத்து மதிப்பிட முடியாது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.