முகப்பு /செய்தி /விளையாட்டு / ‘ஆர்.சி.பி அணியில் இந்திய பேட்ஸ்மேன்கள் திறமையை வெளிப்படுத்த வேண்டும்’ – முன்னாள் வீரர் கடும் விமர்சனம்

‘ஆர்.சி.பி அணியில் இந்திய பேட்ஸ்மேன்கள் திறமையை வெளிப்படுத்த வேண்டும்’ – முன்னாள் வீரர் கடும் விமர்சனம்

பயிற்சியில் ராஜஸ்தான் அணி வீரர்கள்

பயிற்சியில் ராஜஸ்தான் அணி வீரர்கள்

பெங்களூரு அணியில் KGF (Kohli GlenMaxwell Faf Duplesis) எனப்படும் கோலி, மேக்ஸ்வெல், டூப்ளசிசை தவிர்த்து மற்ற பேட்ஸ்மேன்கள் யாரும் அணியின் வெற்றிக்காக பங்களிப்பு செய்யவில்லை.

  • Last Updated :
  • Tamil Nadu, India

விராட் கோலி தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியில் இடம்பெற்றுள்ள இந்திய வீரர்கள் தங்களது முழு திறமையை வெளிப்படுத்த வேண்டும் என்று முன்னாள் வீரர் இர்ஃபான்பதான் விமர்சித்துள்ளார். விராட் கோலி,ஏபி டிவில்லியர்ஸ், கிறிஸ் கேல் போன்ற முக்கிய ஆட்டக்காரர்கள் அணியில் இடம்பெற்றிருந்தாலும் பெங்களூரு அணியால் ஒருமுறை கூட ஐபிஎல் கோப்பையை வெல்ல முடியவில்லை. நடப்பு சீசனிலும் பெங்களூரு அணியின் சோகக்கதை தொடர்வதால் ரசிகர்கள் கடும் அதிருப்தியில் இருக்கிறார்கள்.

இதுவரை 8 போட்டிகளியில் விளையாடியுள்ள பெங்களூரு அணி 4 இல் மட்டுமே வெற்ற பெற்று பாயின்ட்ஸ் டேபிளில் 6 ஆவது இடத்தில் உள்ளது. இன்றைய ஆட்டத்தில் வலுவான லக்னோ அணியை ஆர்.சி.பி எதிர்கொள்கிறது. இந்நிலையில் பெங்களூரு அணி குறித்து கடுமையான விமர்சனங்களை முன் வைத்துள்ளார் முன்னாள் வீரர் இர்பான் பதான். இதுதொடர்பாக அவர் அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது-

top videos

    பெங்களூரு அணியில் KGF (Kohli GlenMaxwell Faf Duplesis) எனப்படும் கோலி, மேக்ஸ்வெல், டூப்ளசிசை தவிர்த்து மற்ற பேட்ஸ்மேன்கள் யாரும் அணியின் வெற்றிக்காக பங்களிப்பு செய்யவில்லை. தினேஷ் கார்த்திக், மஹிபால் லோம்ரோர் உள்ளிட்ட எந்தவொரு வீரரும் அணியின் வெற்றிக்காக கடுமையாக முயற்சி செய்யவில்லை. குறிப்பாக தினேஷ் கார்த்தியால் கடந்த 8 போட்டிகளில் விளையாடி ஒரு போட்டியில் கூட அவரால் ரன்களை குவிக்க முடியவ்லலை. பெங்களூரு அணி அதிகமான ஸ்கோரை அடிப்பதற்காக தினேஷ் கார்த்திக்கை நம்பியுள்ளது. பெங்களூரு அணியில் பேட்டிங்தான் மிகப்பெரும் பிரச்னையாக உள்ளது. எனவே அதிலுள்ள இந்திய அணி வீரர்கள் தங்களது திறமையை நிரூபிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    First published:

    Tags: IPL, IPL 2023