ஐபிஎல் சாம்பியன் பட்டத்தை 5ஆவது முறையாக வென்றுள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வெற்றி கொண்டாட்ட புதிய வீடியோ வெளியாகி உள்ளது. இந்த வீடியோவை சென்னை சூப்பர் கிங்ஸ் தனது சமூக வலைத்தள பக்கங்களில் இன்று காலை வெளியிட்டுள்ளது. 3 நிமிடங்கள் ஓடக்கூடிய இந்த வீடியோவில், வீரர்களின் டிரெஸ்ஸிங் ரூம் கொண்டாட்ட காட்சிகள் இடம் பெற்றுள்ளன.
சென்னை அணியின் மொயின் அலி சக வீரர்கள் அனைவரிடமும் தனது டி-ஷர்டில் ஆட்டோகிராப் பெற்றுக் கொள்கிறார். வெற்றி கோப்பையுடன் வீரர்கள் ஒவ்வொருவரும் புகைப்படம் எடுத்துக் கொள்ளும் காட்சி, சிஎஸ்கே பேருந்தில் வீரர்களின் கொண்டாட்டம் உள்ளிட்டவை இந்த புதிய வீடியோவில் இடம் பெற்றுள்ளன.
வீடியோவை பார்க்க…
Celebrating the Super Kings Way 🦁
Watch Full 📹🔗 https://t.co/KfsT53y6J2#CHAMPION5 #WhistlePodu #Yellove 💛 pic.twitter.com/JzhOEohAcE
— Chennai Super Kings (@ChennaiIPL) June 2, 2023
மிகவும் பரபரப்பாக குஜராத் அணிக்கு எதிராக நடைபெற்ற ஐபிஎல் இறுதிப் போட்டியில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கடைசி பந்தில் த்ரில்லிங்கான வெற்றியை பெற்றது. கடைசி 2 பந்துகளில் 10 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் முதல் பந்தை சிக்சருக்கும், இரண்டாவது பந்தை பவுண்டரிக்கும் அடித்து சென்னை அணியின் ரவீந்திர ஜடேஜா வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்தார். இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த குஜராத் டைட்டன்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 214 ரன்கள் எடுத்தது. அடுத்த பேட்டிங் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு மழை காரணமாக 15 ஓவர்களில் 171 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. இந்த இலக்கை கடைசி பந்தில் அடைந்து சென்னை சூப்பர் கிங்ஸ் 5ஆவது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 46, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.