முகப்பு /செய்தி /விளையாட்டு / IPL 2023 : மும்பை அணியில் ஜோஃப்ரா ஆர்ச்சருக்கு பதிலாக கிறிஸ் ஜோர்டன் சேர்ப்பு…

IPL 2023 : மும்பை அணியில் ஜோஃப்ரா ஆர்ச்சருக்கு பதிலாக கிறிஸ் ஜோர்டன் சேர்ப்பு…

கிறிஸ் ஜோர்டன்

கிறிஸ் ஜோர்டன்

இங்கிலாந்து அணியை சேர்ந்த ஜோர்டன் 87 சர்வதேச டி20 போட்டிகளில் விளையாடி 96 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

  • Last Updated :
  • Tamil Nadu, India

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் காயம் அடைந்துள்ள மும்பை இந்தியன்ஸ் அணியின் ஜோஃப்ரா ஆர்ச்சருக்கு பதிலாக கிறிஸ் ஜோர்டன் சேர்க்கப்பட்டுள்ளார். இந்த அறிவிப்பை அணி நிர்வாகம் வெளியிட்டுள்ளது. காயம் அடைந்துள்ள ஜோஃப்ரா ஆர்ச்சர் மீதமுள்ள போட்டிகளில் பங்கேற்க மாட்டார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 2016 அம் ஆண்டு ஐபிஎல் போட்டிகளில் அறிமுகமான கிறிஸ் ஜோர்டன் இதுவரை 28 போட்டிகளில் விளையாடி 27 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார்.

இங்கிலாந்து அணியை சேர்ந்த ஜோர்டன் 87 சர்வதேச டி20 போட்டிகளில் விளையாடி 96 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். ஜோர்டனை ரூ. 2 கோடி அளித்து மும்பை இந்தியன்ஸ் அணி சமீபத்தில் ஏலத்தில் எடுத்துள்ளது. பிப்ரவரி மாதம் முடிந்த சர்வதேச லீக் டி20 போட்டிகளில் சாம்பியன் பட்டம் வென்ற கல்ஃப் ஜெயன்ட்ஸ் அணியில் ஜோர்டன் இடம்பெற்றிருந்தார். இந்த தொடரில் 20 விக்கெட்டுகளை கைப்பற்றி அதிக விக்கெட்டுகளை பெற்றவர் என்ற பெயரையும் அவர் பெற்றுள்ளார்.

top videos

    மும்பை இந்தியன்ஸ் அணி இன்று ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை எதிர்கொள்ளவுள்ள நிலையில் இன்றைய ஆட்டத்தில் கிறிஸ் ஜோர்டன் இடம்பெறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மும்பை இந்தியன்ஸ் அணி தனது முந்தைய ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் வென்றிருந்தது. பெங்களூரு அணி தனது முந்தைய ஆட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணியிடம் 7 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியடைந்திருந்தது. இன்றைய போட்டியில் வெற்றி பெறும் அணி பாயின்ட்ஸ் டேபிளில் 3 ஆவது இடத்திற்கு முன்னேறும் என்பதால் இன்றைய ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது.

    First published:

    Tags: IPL, IPL 2023