முகப்பு /செய்தி /விளையாட்டு / மைதானத்தில் முட்டிக்கொண்ட கோலி- கம்பீர்... அதிரடி நடவடிக்கை எடுத்த ஐபிஎல் நிர்வாகம்

மைதானத்தில் முட்டிக்கொண்ட கோலி- கம்பீர்... அதிரடி நடவடிக்கை எடுத்த ஐபிஎல் நிர்வாகம்

கோலி

கோலி

மைதானத்தில் சண்டையிட்டுக் கொண்ட கோலிக்கும், கவுதம் காம்பீருக்கு ஐ.பி.எல் நிர்வாகம் அபராதம் விதித்துள்ளது.

  • Last Updated :
  • Lucknow, India

பெங்களூருவிலுள்ள சின்னசாமி மைதானத்தில் ஏப்ரல் 10-ம் தேதி நடைபெற்ற பெங்களூரு, லக்னோ அணியின் போட்டியில் இறுதிவரை போராடி லக்னோ அணி வெற்றி பெற்றது. போட்டியில் தொடக்கத்தில் பெங்களூருக்கு இருந்த வெற்றி வாய்ப்பு இறுதி நேரத்தில் மாறியது.

இருப்பினும், ஆர்.சி.பியின் ஹோம் க்ரவுண்டான சின்னசாமி மைதானத்தில் மேட்ச்சில் லக்னோ ஜெயிச்சாலும் ஸ்டேடியத்தில் இருந்த ரசிகர்கள் ஆர்சிபி.. ஆர்சிபி என கத்த கடுப்பானார் லக்னோ மெண்டார் கவுதம் கம்பீர். சின்னசாமி க்ரவுண்டுக்குள் வந்த கம்பீர் கேலரியில் இருந்த ரசிகர்களை நோக்கி சைலென்ஸ் என விரலை வாயில் வைத்து மிரட்டினார்.

இந்தநிலையில் நேற்றையப் போட்டியில் கோலி, டூபிளசிஸ் தவிர மற்ற வீரர்கள் சொதப்பலான ஆட்டத்தை வெளிப்படுத்த 126 என்ற சொற்ப ரன்களுக்கு சுருண்டது ஆர்.சி.பி. இரண்டாவது பாதியில் களத்துக்கு வந்ததில் இருந்தே கோலி பீஸ்ட் மோடில் இருந்தார். விராட் கோலிக்கு ஏற்றவாறு ஆர்.சி.பி பந்துவீச்சாளர்கள் விக்கெட் வேட்டை நடத்தினர். ஒவ்வொரு விக்கெட்டுக்கும் கோலி சைலென்ஸ் என சொல்லி கம்பீரின் செய்கையை நினைவூட்டினார்.

9-வது விக்கெட் இணைந்த நவீன் உல் ஹக் - அமித் மிஸ்ரா ஜோடி நிதானமாக ரன் குவிக்க. சீராஜ் கொஞ்சம் சீண்டி பார்க்க.. கோலி சீறிப்பாய ஆரம்பித்துவிட்டார். நவீன் உல் ஹக்கை வார்த்தைகளால் அர்ச்சனை செய்தார்.

இருவருக்கும் களத்திலே முட்டிக்கொண்டது. கோலி ஷூ-காட்டி வம்பிழுத்தார். இருவரும் பார்வையிலே சீண்டிக்கொண்டனர். அமித் மிஸ்ரா கோலியிடம் ஏன் இவ்வளவு ஆக்ரோஷம் எனக் கேட்க மீண்டும் முட்டுக்கொண்டது. அப்புறம் நடுவர்கள் வந்து பஞ்சாயத்து செய்து அனுப்பி வைத்தனர்.

போட்டி முடிந்தவுடன் கோலிக்கும் கவுதம் கம்பீருக்கும் முட்டிக்கொண்டது. இருவரும் ஆக்ரோஷமாக நடந்துக்கொண்டனர். கைல் மேயர்ஸ் - கோலி ஜாலியா பேசிக்கொண்டிருக்க அங்கு வந்த கம்பீர், மேயர்ஸை கையோடு கூட்டிச்சென்றார். இதனால் கடுப்பான கோலி வார்த்தைகளை வீசி கம்பீரை வம்புக்கு இழுத்தார்.

அதனையடுத்து, கம்பீர், கோலியிடையே வாக்குவாதம் முட்டியது. கம்பீர் - விராட் கோலி இருவரும் மோதிக்கொள்வது போல் ஆக்ரோஷமாக நேருக்கு நேர் நிற்க இரு அணி வீரர்களும், நிர்வாகிகளும் சூழ்ந்தனர். இருவரையும் சமாதானப்படுத்தி அழைத்து சென்றனர். இந்த வீடியோ இணையத்தில் வெளியாக வைரலாகி வருகிறது.

IPL 2023 : லக்னோவை 18 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது ஆர்.சி.பி

top videos

    இந்தநிலையில் விதிமுறைகளை மீறி மைதானத்தில் சண்டையிட்டுக் கொண்டதால் ஐ.பி.எல் நிர்வாகம் விராட் கோலி, லக்னோ அணியின் ஆலோசகர் கவுதம் காம்பீருக்கு அபராதம் விதித்துள்ளது. அதன்படி, இருவருக்கும் அவர்களது ஊதியத்தில் 100 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. லக்னோ வீரர் நவீன் உல்-ஹக்கிற்கும் போட்டி ஊதியத்தில் 50 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

    First published:

    Tags: IPL 2023