இந்திய அணியில் இடம்பெற 5 சிக்சர்களை தொடர்ச்சியாக அடித்தால் மட்டும் போதாது என்று ரிங்கு சிங்கிற்கு அறிவுரை கூறியுள்ள தேர்வுக்குழு முன்னாள் உறுப்பினர் சரன்தீப், ரிங்கு சிங் செய்ய வேண்டியவை குறித்து விளக்கம் அளித்துள்ளார். ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் உத்தரப்பிரதேசத்தை சேர்ந்த ரிங்கு சிங் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார். இவர் குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிராக நடைபெற்ற போட்டியின்போது கடைசி ஓவரில் கடைசி 5 பந்துகளில் சிக்சர்கள் அடித்து அணியை வெற்றி பெற வைத்தார்.
இந்த போட்டியில் கொல்கத்தா அணி வெற்றி பெற கடைசி ஓவரில் 29 ரன்கள் தேவையாக இருந்த நிலையில், எவரும் எதிர்பார்க்காத வகையில் 5 சிக்சர்களை தொடர்ச்சியாக அடித்து கிரிக்கெட் ரசிகர்களின் கவனத்தை ரிங்கு சிங் பெற்றிருந்தார். ரிங்கு சிங்கின் அதிரடி ஆட்டத்தை பல்வேறு கிரிக்கெட் வீரர்கள் பாராட்டியிருந்தனர். இந்நிலையில் இதுகுறித்து இந்திய கிரிக்கெட் அணியின் தேர்வுக்குழு முன்னாள் உறுப்பினர் சரண்தீப் சிங் அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது-
குஜராத் அணிக்கு எதிராக ரிங்கு சிங் விளையாடிய விதத்தை யாரும் அவ்வளவு எளிதில் மறந்து விட முடியாது. அவரை தொடர்ந்து இதுபோன்று விளையாட வேண்டும். உத்தரப்பிரதேச அணிக்காக சிறப்பான முறையில் ரிங்கு சிங் விளையாடியுள்ளார். அவர் மிகச்சிறந்த கிரிக்கெட் வீரர். இந்திய அணியில் அவர் இடம்பெற 5 பந்துகளில் 5 சிக்சர்கள் அடித்தால் மட்டும் போதாது. அணிக்கு அவர் பலமுறை வெற்றியைத் தேடித் தர வேண்டும். அதுதான் அடிப்படை விஷயம். அதற்கான திறமை ரிங்கு சிங்கிடம் இருக்கிறது. நான் அவருடைய மிகப்பெரும் ரசிகராக உள்ளேன். 5 சிக்சர்களை அடித்ததற்காக நான் அவருடைய ரசிகராக மாறவில்லை. உள்ளூர் போட்டிகளில் அவர் உத்தரப்பிரதேச அணிக்காக விளையாடியபோதே அவரை எனக்கு தெரியும். இவ்வாறு அவர் கூறினார். ஐபிஎல் தொடரில் தற்போது 6 போட்டிகளில் விளையாடியுள்ள ரிங்கு சிங் 180 ரன்களை எடுத்திருக்கிறார். சராசரி 45 ரன்கள். ஸ்ட்ரைக் ரேட் 156.52 ஆக உள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.