முகப்பு /செய்தி /விளையாட்டு / நடப்பு ஐபிஎல் தொடரில் 4 முறை டக் அவுட்… மோசமான ரிக்கார்டை ஏற்படுத்திய ஜாஸ் பட்லர்

நடப்பு ஐபிஎல் தொடரில் 4 முறை டக் அவுட்… மோசமான ரிக்கார்டை ஏற்படுத்திய ஜாஸ் பட்லர்

பர்னெல் பந்துவீச்சில் ஆட்டமிழந்து  வெளியேறும் ஜாஸ் பட்லர்.

பர்னெல் பந்துவீச்சில் ஆட்டமிழந்து வெளியேறும் ஜாஸ் பட்லர்.

172 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி விளையாடிய ராஜஸ்தான் அணியால் 10.3 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 59 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது.

  • Last Updated :
  • Tamil Nadu, India

நடப்பு ஐபிஎல் தொடரில் 4 முறை டக் அவுட் ஆகியுள்ள ராஜஸ்தான் அணியின் ஜாஸ் பட்லர் மோசமான ரிக்கார்டை ஏற்படுத்தியிருக்கிறார். ஐபிஎல் கிரிக்கெட் தொடர் தற்போது மிகுந்த விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. லீக் சுற்றில் இன்னும் 8 போட்டிகள் மட்டுமே மீதம் உள்ள நிலையில் ப்ளே ஆஃப் சுற்றுக்குள் நுழைய தற்போது 8 அணிகள் வரை கடுமையாக போராடி வருகின்றனர். இந்நிலையில் நேற்று ஜெய்ப்பூரில் நடைபெற்ற முக்கியமான லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல் ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதின.

இந்த போட்டியில் வெற்றி பெறும் அணி ப்ளே ஆஃப் சுற்றுக்கான வாய்ப்பை அதிகப்படுத்திக் கொள்ளும் என்பதால் ஆட்டத்தில் விறுவிறுப்பு காணப்பட்டது. முதலில் பேட்டிங் செய்த பெங்களூரு அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 171 ரன்கள் எடுத்திருந்தது. இதையடுத்து 172 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி விளையாடிய  ராஜஸ்தான் அணியால் 10.3 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 59 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. பெங்களூரு அணி தரப்பில் வேய்ன் பர்னெல் 10 ரன்கள் மட்டுமே கொடுத்து 3 விக்கெட்டுகளையும், மைக்கேல் பிரேஸ்வெல் 16 ரன்கள் கொடத்து 2 விக்கெட்டுகளையும், கரன் ஷர்மா 19 ரன்கள் கொடுத்து 2  விக்கெட்டுகளையும் எடுத்தனர். இந்த போட்டியில் 2 பந்துகளை மட்டுமே எதிர்கொண்டு ஜாஸ் பட்லர் கேட்ச் முறையில் ஆட்டமிழந்தார்.

இதனுடன் சேர்த்து நடப்பு ஐபிஎல் சீசனில் 4 ஆவது முறையாக டக் அவுட் ஆகியுள்ளார் ஜாஸ் பட்லர். இதன் மூலம் ஒரே சீசனில் 4 முறை டக் அவுட் ஆன வீரர்கள் பட்டியலில் பட்லர் இணைந்துள்ளார். முன்னதாக இதே மோசமான சாதனையை ஹெர்ஷெல் கிப்ஸ், மணிஷ் பாண்டே, ஷிகர் தவான், யோன் மோர்கன், நிகோலஸ் பூரன் ஆகியோர் ஏற்படுத்தியிருந்தனர். இந்த வரிசையில் பட்லரும் இணைந்துள்ளார்.

First published:

Tags: IPL, IPL 2023