முகப்பு /செய்தி /விளையாட்டு / IPL 2023 : சென்னை அணியில் கைல் ஜேமிசனுக்கு மாற்று வீரராக சிசாண்டா மகலா இணைந்தார்….

IPL 2023 : சென்னை அணியில் கைல் ஜேமிசனுக்கு மாற்று வீரராக சிசாண்டா மகலா இணைந்தார்….

சிசாண்டா மகலா

சிசாண்டா மகலா

கடந்த 2015 ஆம் ஆண்டு நடந்த ஐபிஎல் தொடரின்போது கைல் ஜேமிசனை ஆர்.சி.பி. அணி ரூ. 15 கோடி கொடுத்து ஏலத்தில் பெற்றது.

  • Last Updated :
  • Tamil Nadu, India

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் சென்னை அணியில் நியூசிலாந்து பவுலர் கைல் ஜேமிசனுக்கு பதிலாக தென்னாப்பிரிக்க அணியின் வேகப்பந்து வீச்சாளர் சிசாண்டா மகலா இணைந்துள்ளார். ஏலத்தில் ரூ. 1 கோடி கொடுக்கப்பட்டு எடுக்கப்பட்ட ஜேமிசனுக்கு காயம் ஏற்பட்டதால் அவர் தொடரிலிருந்து விலகியுள்ளார். இந்நிலையில் மகலா அவருக்கு பதிலாக அணியில் இணைந்திருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.  இதுதொடர்பாக ஐபிஎல் நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது –

கைல் ஜேமிசனுக்கு பதிலாக தென்னாப்பிரிக்க அணியின் சிசாண்டா மகலா இணைந்துள்ளார். தென்னாப்பிரிக்க அணிக்காக 4  டி20 போட்டிகளில் விளையாடினாலும் அவர், உள்ளூர் ஆட்டங்களில் தொடர்ச்சியாக விக்கெட்டுகளை எடுத்து கவனம் பெற்றிருக்கிறார். அடிப்படை விலை ரூ. 50 லட்சத்திற்கு அவர் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இணைந்துள்ளார். என்று கூறப்பட்டுள்ளது. சமீபத்தில் நடந்து முடிந்த தென்னாப்பிரிக்க ப்ரீமியர் போட்டியான எஸ்.ஏ.20-யில் சிசாண்டா மகலா சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணியில் இடம்பெற்றிருந்தார்.

top videos

    சன்ரைசர்ஸ் அணிக்காக மொத்தம் 12 போட்டிகளில் விளையாடி 14 விக்கெட்டுகளை அவர் எடுத்துள்ளார். 32 வயதாகும் அவர் தென்னாப்பிரிக்க அணிக்காக 5 ஒருநாள் மற்றும் 4 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார். கடந்த 2015 ஆம் ஆண்டு நடந்த ஐபிஎல் தொடரின்போது கைல் ஜேமிசனை ஆர்.சி.பி. அணி ரூ. 15 கோடி கொடுத்து ஏலத்தில் பெற்றது. நடப்பு சீசன் வரும் 31 ஆம் தேதி அகமதாபாத்தில்தொடங்குகிறது. இதில் நடப்பு சாம்பியன் குஜராத் டைட்டன்ஸ் அணியை சென்னை சூப்பர் கிங்ஸ் எதிர்கொள்கிறது.

    First published:

    Tags: Cricket