முகப்பு /செய்தி /விளையாட்டு / IPL 2023 : சி.எஸ்.கே. – மும்பை மேட்ச்சை கண்டு ரசித்த தோனியின் மகள்… லைக்ஸை அள்ளும் க்யூட் ஃபோட்டோ

IPL 2023 : சி.எஸ்.கே. – மும்பை மேட்ச்சை கண்டு ரசித்த தோனியின் மகள்… லைக்ஸை அள்ளும் க்யூட் ஃபோட்டோ

ஜிவா தோனி

ஜிவா தோனி

கேமரூன் கிரீன், இஷான் கிஷன், கேப்டன ரோஹித் சர்மா உள்ளிட்ட அனைத்து வீரர்களும் சி.எஸ்.கே. பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் திணறினர்.

  • Last Updated :
  • Tamil Nadu, India

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கு இடையிலான ஆட்டத்தை தோனியின் மகள் ஜிவா கண்டு ரசித்தார். நீண்ட இடைவேளைக்கு பின்னர் தோனியின் மகளின் புகைப்படம் வெளியாகி லைக்ஸ்களை குவித்து வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணியின் கேப்டன் தோனி பவுலிங்கை தேர்வு செய்தார். இதையடுத்து மும்பை அணியின் வீரர்கள் விளையாடினர்.

முந்தைய அணிகளின் பந்துவீச்சை வெளுத்து வாங்கியதைப் போன்று, சென்னை அணியின் பவுலிங்கில் மும்பை பேட்ஸ்மேன்களால் ரன்கள் குவிக்க முடியவில்லை. கேமரூன் கிரீன், இஷான் கிஷன், கேப்டன ரோஹித் சர்மா உள்ளிட்ட அனைத்து வீரர்களும் சி.எஸ்.கே. பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் திணறினர்.

ஆட்டத்தின் இடையே சென்னை சூப்பர் கிங்ஸின் அதிகாரப்பூர்வ சமூக வலைதள பக்கங்களில் தோனியின் மகள் ஜிவாவின் புகைப்படம் வெளியாகியது. கையில் சென்னை அணியின் கொடியை வைத்துக் கொண்டு ஃபோட்டோவுக்கு க்யூட் போஸ் கொடுக்கும் தோனியின் மகள், சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகியுள்ளார். கழுத்தில் மஞ்சள் வண்ண விசிலுடன் வெளியாகியுள்ள ஜிவாவின் ஃபோட்டோ லைக்ஸை குவித்து வருகிறது.

First published:

Tags: IPL, IPL 2023