சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று நடைபெற்ற சென்னை சூப் கிங்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் ப்ளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறுவதற்கான வாய்ப்புகளை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் தக்க வைத்துக் கொண்டுள்ளது. மேலும், அடுத்து நடைபெறவுள்ள போட்டியில் கொல்கத்தா அணி கட்டாய வெற்றி பெற வேண்டும். மே 20 ஆம் தேதி கொல்கத்தாவில் நடைபெறவுள்ள ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி வீழ்த்த வேண்டும். இதன் மூலம் அனைத்து போட்டிகளிலும் விளையாடி 14 புள்ளிகளை கொல்கத்தா அணி பெற்றிருக்கும்.
இதைத் தவிர்த்து மற்ற அணிகளின் வெற்றி தோல்விகளைப் பொறுத்து கொல்கத்தா அணி ப்ளே ஆஃப் சுற்றுக்குள் முன்னேறுவதற்கான வாய்ப்புகளை பெறலாம். ஐபிஎல் தொடரில் ஒவ்வொரு அணியும் தலா 11 முதல் 13 போட்டிகளில் விளையாடி முடித்துள்ளன. லீக் சுற்றில் இன்றும் 8 போட்டிகள் மட்டுமே மீதம் உள்ளன. தற்போதைய சூழலில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகள் தொடரில் இருந்து வெளியேறி விட்டன. பாயின்ட்ஸ் டேபிளில் முதல் 4 இடங்களில் இருக்கும் அணிகள் மட்டுமே அடுத்த சுற்றுக்கு முன்னேறும்.
அந்த வகையில் 4 ஆவது இடத்தை பிடிப்பதற்கு பெங்களூரு, ராஜஸ்தான், கொல்கத்தா, பஞ்சாப் மற்றும் லக்னோ அணிகளுக்கு இடையே போட்டி காணப்படுகிறது. இவற்றில் பஞ்சாப் மற்றும் பெங்களூரு அணிகள் 12 போட்டிகளில் மட்டுமே விளையாடி 6 வெற்றிகளுடன் தலா 12 புள்ளிகளை பெற்றுள்ளன. பஞ்சாப் அணி அடுத்த ஆட்டங்களில் ராஜஸ்தான் மற்றும் டெல்லி அணிகளை எதிர்கொள்கிறது. இவ்விரு போட்டிகளிலும் பஞ்சாப் வெற்றி பெற்றால் அந்த அணி ப்ளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறும். இதேபோன்று பெங்களூரு அணி தனது அடுத்த ஆட்டங்களில் ஐதராபாத் மற்றும் குஜராத் அணிகளை எதிர்கொள்கிறது. இவை இரண்டிலும் பெங்களூரு வெற்றி பெற்றால் ப்ளே ஆஃப் வாய்ப்பை உறுதி செய்து விடும். தற்போதைய சூழல் கொல்கத்தா அணி ப்ளே ஆஃப் சுற்றுக்கு முன்னேற வேண்டும் என்றால் அடுத்த ஆட்டத்தில் கட்டாய வெற்றி பெற வேண்டும் என்பது முதல் தகுதியாக உள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.