முகப்பு /செய்தி /விளையாட்டு / IPL 2023 : ப்ளே ஆஃப் சுற்றை இன்று உறுதி செய்யுமா சி.எஸ்.கே.? கொல்கத்தா அணியுடன் மோதல்

IPL 2023 : ப்ளே ஆஃப் சுற்றை இன்று உறுதி செய்யுமா சி.எஸ்.கே.? கொல்கத்தா அணியுடன் மோதல்

சென்னை சூப்பர் கிங்ஸ்

சென்னை சூப்பர் கிங்ஸ்

ஒவ்வொரு அணிகளுக்கும் குறைந்தது தலா 2 போட்டிகள் மீதம் உள்ள நிலையில், ப்ளே ஆஃபில் 4 ஆவது இடத்தில் இருக்கும் அணி 16 புள்ளிகளைப் பெற்றிருக்கும் என்று கணக்கிடப்பட்டுள்ளது.

  • Last Updated :
  • tamil , India

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெறவுள்ள கொல்கத்தா அணிக்கு எதிரான ஆட்டத்தில் வெற்றி பெறுவதன் மூலம் சென்னை அணி ப்ளே ஆஃப் வாய்பை உறுதி செய்யும். இந்நிலையில், கொல்கத்தாவை இன்றைய போட்டியில் சென்னை அணி வெல்லுமா என்ற எதிர்பார்ப்பில் ரசிகர்கள் உள்ளனர். ஐபிஎல் கிரிக்கெட் தொடர் இறுதிக் கட்டத்தை நோக்கி நகர்ந்துள்ளது. மொத்தம் உள்ள 10 அணிகள் தலா 11 முதல் 12 போட்டிகளில் விளையாடி முடித்துள்ளன.

போட்டி முடிவுகளின் அடிப்படையில் குஜராத் டைட்டன்ஸ் அணி 16 புள்ளிகளுடன் முதலிடத்திலும், சென்னை அணி 15 புள்ளிகளுடன் 2 ஆவது இடத்திலும், மும்பை இந்தியன்ஸ் அணி 14 புள்ளிகளுடன் 3 ஆவது இடத்திலும், லக்னோ அணி 13 புள்ளிகளுடன் 4 ஆவது இடத்திலும் உள்ளன. கொல்கத்தாவுக்கு எதிரான இன்றைய போட்டியில் சென்னை அணி வெற்றி பெற்றால் மொத்தம் 17 புள்ளிகளைப் பெற்று முதலிடத்திற்கு முன்னேறுவதன் மூலம் ப்ளே ஆஃப் சுற்றை உறுதி செய்யும். சென்னை அணிக்கு இன்னும் 2 போட்டிகள் மீதம் உள்ள நிலையில் இரண்டிலும் தோல்வி அடைந்தால் ப்ளே ஆஃப் சுற்றுக்கு செல்வதற்கான வாய்ப்புகள் குறையலாம்.

top videos

    ஒவ்வொரு அணிகளுக்கும் குறைந்தது தலா 2 போட்டிகள் மீதம் உள்ள நிலையில், ப்ளே ஆஃபில் 4 ஆவது இடத்தில் இருக்கும் அணி 16 புள்ளிகளைப் பெற்றிருக்கும் என்று கணக்கிடப்பட்டுள்ளது. இன்று சென்னையுடன் மோதும் கொல்கத்தா அணிக்கு இன்னும் 2 போட்டிகள் மீதம் உள்ள நிலையில், அந்த அணி 12 போட்டிகளில் விளையாடி 5 வெற்றிகளுடன் 10 புள்ளிகளைப் பெற்றுள்ளது. கொல்கத்தா ப்ளே ஆஃப் செல்வதற்கான வாய்ப்பு மிக மிக குறைவாக உள்ள நிலையில், இன்றைய போட்டியில் தோல்வியடைந்து சென்னைக்கு வழி விடுமா அல்லது வெற்றி பெற்று சி.எஸ்.கே ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுக்குமா என்பது இன்றிரவுக்குள் தெரிந்து விடும்

    First published:

    Tags: IPL, IPL 2023