முகப்பு /செய்தி /விளையாட்டு / IPL 2023 : டெல்லிக்கு எதிரான இன்றைய போட்டியில் விளையாடுவாரா பென் ஸ்டோக்ஸ்?

IPL 2023 : டெல்லிக்கு எதிரான இன்றைய போட்டியில் விளையாடுவாரா பென் ஸ்டோக்ஸ்?

பென் ஸ்டோக்ஸ்

பென் ஸ்டோக்ஸ்

2017 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் அறிமுகம் ஆன பென் ஸ்டோக்ஸ் இதுவரை 935 ரன்கள் மற்றும் 28 விக்கெட்டுகளை எடுத்துள்ளார்.

  • Last Updated :
  • Tamil Nadu, India

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ஆல் ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் இன்று நடைபெறவுள்ள டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் விளையாடுவாரா என்ற எதிர்பார்ப்பில் ரசிகர்கள் உள்ளனர். இங்கிலாந்து அணியின் ஆல் ரவுண்டராக இருக்கும் பென் ஸ்டோக்ஸை சென்னை அணி கடந்த ஆண்டு நடந்த ஏலத்தில் ரூ. 16.25 கோடிக்கு வாங்கியது. அந்த சூழலில் மதிப்பு மிக்க வீரராக ஸ்டோக்ஸ் இருந்தார். இருப்பினும் பெரு விரலில் ஏற்பட்டுள்ள காயம் காரணமாக அவரால் சென்னை அணியில் பங்கேற்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

நடப்பு ஐபிஎல் சீசனில் சென்னை அணி 11 ஆட்டங்களில் விளையாடி முடித்துள்ளது. இதில் 2 போட்டிகளில் மட்டுமே ஸ்டோக்ஸ் பங்கேற்றுள்ளார். இந்நிலையில் சென்னை மற்றும் டெல்லி அணிகள் மோதும் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்றிரவு 7.30 மணிக்கு தொடங்கவுள்ளது. ஏற்கனவே 11 போட்டிகளில் 6 இல் வெற்றி பெற்றதுடன், ஒரு போட்டியில் முடிவு அறிவிக்கப்படாததால் கூடுதலாக 1 புள்ளியைப் பெற்று மொத்தம் 13 புள்ளிகளுடன் சென்னை அணி 2 ஆவது இடத்தில் இருக்கிறது.

top videos

    இன்றைய போட்டியில் சென்னை அணி வெற்றி பெற்றால் ப்ளே ஆஃப் சுற்றுக்குள் நுழைவதற்கான வாய்ப்பு பிரகாசம் அடையும். இந்த போட்டியில் பென் ஸ்டோக்ஸ் விளையாடுவாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்திருக்கும் நிலையில், அவர் வலைப் பயிற்சி  மேற்கொள்ளும் வீடியோவை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெளியிட்டுள்ளது. இதனால் ரசிர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர். அகமதாபாத்தில் நடைபெறவுள்ள இறுதிப்  போட்டிக்கு முன்பாக ஸ்டோக்சிற்கு அதிக பயிற்சி தேவைப்படுகிறது என்று ரசிகர் ஒருவர் கூறியுள்ளார். சென்னை அணியின் சில ரசிகர்கள் பென் ஸ்டோக்ஸ் அணியின் பணத்தை வீணடித்து விட்டார் என்று விமர்சித்துள்ளனர். மேலும் சிலர் மொயின் அலிக்கு பதிலாக பென் ஸ்டோக்சை களமிறக்க வேண்டும் என்று கூறியுள்ளார்கள். 2017 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் அறிமுகம் ஆன பென் ஸ்டோக்ஸ் இதுவரை 935 ரன்கள் மற்றும் 28 விக்கெட்டுகளை எடுத்துள்ளார்.

    First published:

    Tags: IPL, IPL 2023