2023 ஐபிஎல் திருவிழா தொடங்கிய நிலையில், முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி குஜராத் டைடன்ஸ் அணியை எதிர்கொண்டு விளையாடியது. இந்தப் போட்டியில் சென்னை அணியை தோல்வி அடைந்தது ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை தந்தது.
டாஸ் வென்ற குஜராத் அணி சென்னை அணியை முதலில் பேட் அழைத்தது. முதலில் பேட் செய்ய களமிறங்கிய சிஎஸ்கே அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 178 ரன்களை குவித்தது. அணியின் தொடக்க வீரர் ருத்துராஜ் கெய்க்வாட் அபாரமாக ஆடி 52 பந்துகளில் 92 ரன்கள் எடுத்தார். 179 ரன்கள் என்ற வெற்றி இலக்குடன் களமிறங்கிய குஜராத் அணியின் தொடக்க வீரர்கள் சாஹா மற்றும் சுப்மன் கில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணிக்கு நல்ல அடித்தளத்தை போட்டு தந்தனர். குறிப்பாக சுப்மன் கில் அதிரடியாக விளையாடி 36 பந்துகளில் 63 ரன்கள் குவித்தார்.
இறுதியில் குஜராத் அணி 19.2 ஓவர்களில் 182 ரன்கள் எடுத்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. சென்னை அணியின் இளம் பந்து வீச்சாளர் துஷார் தேஷ்பாண்டே 4 ஓவர்களில் 51 ரன்கள் விட்டுக்கொடுத்து மோசமான பெர்பார்மென்ஸ் செய்தார். முதல் போட்டியில் சென்னை அணியின் தோல்விக்கு கேப்டன் எம்எஸ் தோனி எடுத்த முடிவு முக்கிய காரணமாக அமைந்தது என முன்னாள் வீரர் விரேந்தர் சேவாக் விமர்சித்துள்ளார்.
இது குறித்து பேசி சேவாக், "பந்துவீச்சின் போது கேப்டன் தோனி அனுபவம் மிக்க வீரரான மொயின் அலியை இடையே அதிகம் பயடுத்தி இருக்க வேண்டும். துஷார் தேஸ்பாண்டேவை அவர் அதிகம் பயன்படுத்தி இருக்கக்கூடாது.
இதையும் படிங்க: பெரிய எல்.இ.டி. திரை.. சென்னை மெட்ரோ ரயில் நிலையங்களில் ஐபிஎல்.. கட்டண விவரம் இதோ!
கேப்டனாக தோனி இவ்வாறு தவறுகளை மேற்கொள்வார் என நாம் எதிர்பார்த்திருக்க மாட்டோம். ஆனால், வலது கை பேட்ஸ்மேன்கள் களத்தில் இருக்கும் போது ஆஃப் ஸ்பின்னரை பயன்படுத்தி இருந்தால் நல்ல பலன் கிடைத்திருக்கும்" என சேவாக் கூறியுள்ளார். அதேபோல், முன்னாள் வீரர் மனோஜ் திவாரியும் துஷாரின் பந்துவீச்சை தோல்விக்கு காரணமாக கூறி விமர்சித்துள்ளார். நாளை நடைபெறும் போட்டியில் சென்னை அணி லக்னோ அணியை எதிர்கொள்கிறது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: IPL 2023, MS Dhoni, Virender Sehwag