முகப்பு /செய்தி /விளையாட்டு / ‘ப்ளே ஆஃப் சுற்றுக்கு மும்பை அணி தகுதி பெறும்’ – வீரேந்தர் சேவாக் நம்பிக்கை

‘ப்ளே ஆஃப் சுற்றுக்கு மும்பை அணி தகுதி பெறும்’ – வீரேந்தர் சேவாக் நம்பிக்கை

மும்பை இந்தியன்ஸ் அணி

மும்பை இந்தியன்ஸ் அணி

ஒவ்வொரு கிரிக்கெட் வீரரும் மும்பை அணிக்காக விளையாடுவதை விரும்புவார். – ஹர்பஜன் சிங்

  • Last Updated :
  • Tamil Nadu, India

ப்ளே ஆஃப் சுற்றுக்கு ரோஹித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணி தகுதி பெறும் என்று முன்னாள் வீரரும், கிரிக்கெட் வர்ணனையாளருமான வீரேந்தர் சேவாக் கூறியுள்ளார். ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் நடப்பு சீசனில் மொத்தம் 10 அணிகள் விளையாடி வருகின்றன. இதில் பாயின்ட்ஸ் டேபிளில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் ப்ளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறும். இதுவரை 7 போட்டிகளில் விளையாடியுள்ள மும்பை இந்தியன்ஸ் அணி 3 போட்டிகளில் மட்டும வெற்றி பெற்று 6 புள்ளிகளுடன் 9 ஆவது இடத்தில் உள்ளது. இன்று மும்பை வான்கிடே மைதானத்தில் நடைபெறவுள்ள ஆட்டத்தில் மும்பை அணி ராஜஸ்தான் ராயல்சை எதிர்கொள்கிறது.

இந்த போட்டியில் அதிக ரன்கள் அல்லது விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றால் மும்பை பாயின்ட்ஸ் டேபிளில் 6 ஆவது இடத்திற்கு செல்ல அதிக வாய்ப்புகள் உள்ளன. இந்த நிலையில் இன்றைய ஆட்டம் குறித்து இந்திய அணியின் முன்னாள் வீரரும் கிரிக்கெட் வர்ணனையாளருமான வீரேந்தர் சேவாக் கூறியதாவது- மும்பை இந்தியன்ஸ் அணியை ஒருபோதும் குறைத்து மதிப்பிட முடியாது. ஐபிஎல் கோப்பையை வெல்லும் அனைத்து தகுதிகளும் மும்பை அணிக்கு உள்ளது. கடந்த சில போட்டிகளில் தோல்வியடைந்திருப்பதுஅந்த அணிக்கு தற்காலிக பின்னடைவுதான்.

top videos

    மீண்டும் வெற்றிப் பாதைக்கு மும்பை அணி திரும்பும். ரோஹித் சர்மா சற்று அழுத்தத்துடன் விளையாடுவதுபோல் தெரிகிறது. அதனை முற்றிலுமாக கைவிட்டு விட்டு கிரிக்கெட்டை சுதந்திரமாக விளையாட வேண்டும். ப்ளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறும் வாய்ப்பு மும்பை அணிக்கு இப்போதும் இருக்கிறது. நிச்சயம் மும்பை அணி ப்ளே ஆஃப் சுற்றுக்கு செல்லும் என்று நம்புகிறேன். என்று கூறியுள்ளார். ஹர்பஜன் சிங் கூறுகையில், ‘ஒவ்வொரு கிரிக்கெட் வீரரும் மும்பை அணிக்காக விளையாடுவதை விரும்புவார். அந்த அணியில் தற்போது இளம் வீரர்கள் அதிகம் உள்ளனர். அவர்களுக்கு போதிய வாய்ப்புகள் அளிக்கப்பட வேண்டும்’ என்று கூறினார்.

    First published:

    Tags: IPL, IPL 2023