முகப்பு /செய்தி /விளையாட்டு / பரஸ்பரம் கை குலுக்கிக் கொண்ட கங்குலி – விராட் கோலி… முடிவுக்கு வந்தது மோதல்

பரஸ்பரம் கை குலுக்கிக் கொண்ட கங்குலி – விராட் கோலி… முடிவுக்கு வந்தது மோதல்

கங்குலி - விராட் கோலி

கங்குலி - விராட் கோலி

கோலி – கங்குலி இடையிலான மோதல் போக்குகள் குறித்து வெளியான புகைப்படங்கள், வீடியோக்கள் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தன

  • Last Updated :
  • Tamil Nadu, India

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் நேற்று நடந்த டெல்லி மற்றும் பெங்களூரு மேட்ச்சின் முடிவில் முன்னாள் கேப்டன் கங்குலி மற்றும் விராட் கோலி ஆகியோர் கைகுலுக்கி கொண்டனர். இருவர் இடையிலான மோதல் குறித்து  பரபரப்பான தகவல்கள் வெளிவந்த நிலையில், தற்போது மோதல் போக்கு முடிவுக்கு வந்து விட்டதாக கூறப்படுகிறது. இந்திய கிரிக்கெட் அணியின் ஜாம்பவான்களில் ஒருவராக இருக்கும் சவுரவ் கங்குலி, பிசிசிஐயின் தலைவராகவும் பொறுப்பில் இருந்தார். அந்த கால கட்டத்தில் இந்திய அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்து விராட் கோலி விலகினார்.

இதற்கு கங்குலியே முக்கிய காரணம் என்று கூறப்பட்டது. இதுகுறித்து பேட்டி அளித்திருந்த கோலி, தன்னுடன் கேட்காமலேயே தான் கேப்டன் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டதாக கூறி பரபரப்பை ஏற்படுத்தினார். இந்த மோதல் நீடித்த வந்த நிலையில், கடந்த முறை நடந்த டெல்லி – பெங்களூரு போட்டியின்போது இருவரும் கை குலுக்குவதை தவிர்த்துக் கொண்டனர். மேலும் விராட் கோலி கங்குலி மீதான தனது அதிருப்தியை வெளிப்படுத்தும் வகையில் செயல்பட்டார்.

இந்த மோதல் போக்குகள் குறித்து வெளியான புகைப்படங்கள், வீடியோக்கள் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தன. இந்த நிலையில் நேற்று நடைபெற்ற போட்டியில் பெங்களூரு அணியை டெல்லி 6 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. இதன் பின்னர் கங்குலி – விராட் கோலி இருவரும் பரபரஸ்பரம் கை குலுக்கிக் கொண்டு வாழ்த்துக்களை பரிமாறினர். இந்த  சம்பவம் இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியையும், உற்சாகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

First published:

Tags: IPL, IPL 2023