ஐபிஎல் வரலாற்றில் 7 ஆயிரம் ரன்களை தொட்ட முதல் வீரர் என்ற சாதனையை ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் விராட் கோலி ஏற்படுத்தியுள்ளார். டெல்லியில் இன்று நடைபெற்ற டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தின்போது இந்த சாதனையை பதிவு செய்தார் விராட் கோலி. இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர ஆட்டக்காரராக இருக்கும் விராட் கோலி ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் பெங்களூரு அணிக்காக விளையாடி வருகிறார். இந்த சீசனில் சூப்பர் ஃபார்மில் இருக்கும் அவர், கடந்த 10 இன்னிங்ஸ்களில் மட்டும் 6 அரைச்சதங்களை அடித்து அணியின் வெற்றிகளுக்கு உறுதுணையாக இருந்துள்ளார்.
இந்த நிலையில் தனது 225 ஆவது ஐபிஎல் போட்டியில் 7 ஆயிரம் ரன்களை விராட் கோலி கடந்து புதிய சாதனையை ஏற்படுத்தியுள்ளார். இதனை முறியடிப்பது எளிதானது அல்ல என்று கிரிக்கெட் வல்லுனர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். கோலியைத் தொடர்ந்து பஞ்சாப் அணியின் கேப்டன் ஷிகர் தவான் 6 ஆயிரத்து 536 ரன்களுடன் 2 ஆவது இடத்தில் இருக்கிறார். ஐபிஎல்கிரிக்கெட் தொடர் 2008 ஆம் ஆண்டு முதல் நடத்தப்பட்டு வருகிறது. அது முதற்கொண்டு விராட் கோலி பெங்களூரு அணியில் மட்டுமே இடம்பெற்று வருகிறார்.
ஐபிஎல் தொடரில் விராட் கோலி மொத்தம் 49 அரைச் சதங்களையும், 5 சதங்களையும் அடித்துள்ளார். கோலியின் சராசரி 36.59 ரன்னாக உள்ளது. ஐபிஎல் ஒரே சீசனில் அதிக ரன்களை குவித்தவர் என்ற விராட் கோலியின் இன்னொரு சாதனையும் முறியடிக்கப்படாமல் உள்ளது. 2016 ஐபிஎல் சீசனில் விராட் கோலி 973 ரன்களை எடுத்திருந்தார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.