முகப்பு /செய்தி /விளையாட்டு / ‘5 பந்தில் 5 சிக்சர்… ரிங்கு சிங் செய்ததை என்னால் செய்ய முடியாது’ – விராட் கோலி ஓபன் டாக்

‘5 பந்தில் 5 சிக்சர்… ரிங்கு சிங் செய்ததை என்னால் செய்ய முடியாது’ – விராட் கோலி ஓபன் டாக்

ரிங்கு சிங் - விராட் கோலி

ரிங்கு சிங் - விராட் கோலி

இன்று நடைபெற்ற டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் பெங்களூரு அணி 23 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.

  • Last Updated :
  • Tamil Nadu, India

கொல்கத்தா அணியின் பேட்ஸ்மேன் ரிங்கு சிங் 5 பந்தில் 5 சிக்சர் அடித்ததைப் போன்று தன்னால் செய்ய முடியாது என்று இந்திய அணியின் சீனியர் பேட்ஸ்மேன் விராட் கோலி கூறியுள்ளார். குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிராக நடைபெற்ற ஆட்டத்தில் வெற்றி பெற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு 205 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. இந்த போட்டியில் கடைசி ஓவரில் கொல்கத்தா அணி வெற்றி பெற 29 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் முதல் பந்தில் 1 ரன் கிடைக்க, அடுத்த 5 பந்துகளையும் சிக்சராக மாற்றி ரிங்கு சிங் அணியை வெற்றி பெற வைத்தார்.

இந்த நிகழ்வு கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. கடைசி 5 பந்துகளையும் சிக்சராக்கிய ரிங்கு சிங்கை கிரிக்கெட் ஜாம்பவான்கள் பலரும் பாராட்டியிருந்தனர். இந்த நிலையில் ரிங்கு சிங் குறித்தும், தனது விளையாட்டு தொடர்பாகவும் விராட் கோலி மனம் திறந்து பேசியுள்ளார். அவர் அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது-

top videos

    இளம் வீரர்கள் அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். அதைப் பார்க்கும்போது மிகுந்த ஆச்சரியமாக இருக்கிறது. என்னால் நினைத்துப் பார்க்க முடியாத விஷயங்கள் சிலவற்றை இந்த இளம் வீரர்கள் செய்து முடித்து விடுகிறார்கள். ரிங்கு சிங் 5 பந்துகளில் 5 சிக்சர்களை அடித்து அணியை வெற்றி பெற வைக்கிறார். இது மிகவும் ஆச்சரியமான விஷயம். இதுவெல்லாம் என்ன மாதிரியான ஆட்டம் என நான் வியந்து பார்க்கிறேன். இளம் வீரர்கள் அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்துகின்றனர். இவ்வாறு அவர் கூறினார். இதற்கிடையே இன்று நடைபெற்ற டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் பெங்களூரு அணி 23 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. டெல்லி அணி தொடர்ந்து 5 ஆவது தோல்வியை இந்த தொடரில் தழுவியுள்ளது. இந்த போட்டியில் 50 ரன்கள் எடுத்து அணியின் வெற்றிக்கு விராட் கோலி உதவினார்.

    First published:

    Tags: IPL, IPL 2023