முகப்பு /செய்தி /விளையாட்டு / ‘ஐபிஎல்-ன் சூப்பர் ஸ்டார் விராட் கோலி’ – கிரிக்கெட் வர்ணனையாளர்கள் புகழாரம்

‘ஐபிஎல்-ன் சூப்பர் ஸ்டார் விராட் கோலி’ – கிரிக்கெட் வர்ணனையாளர்கள் புகழாரம்

விராட் கோலி

விராட் கோலி

34 வயதுடைய விராட் கோலி ஓடும் வேகத்தை பார்க்கும் போது அவர் எவ்வளவு ஃபிட்டாக இருக்கிறார் என்பதை புரிந்து கொள்ள முடிகிறது.

  • Last Updated :
  • Tamil Nadu, India

ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் சூப்பர் ஸ்டார் விராட் கோலி என்று கிரிக்கெட் வர்ணனையாளர்கள் புகழாரம் சூட்டியுள்ளனர். டூப்ளசிஸ் தலைமையிலான பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணிக்கும், ரோஹித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணிக்கும் இடையே நடந்த போட்டியில், முதலில் ஆடிய மும்பை அணி 171 ரன்கள் எடுத்தது. இதையடுத்து 172 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி விளையாடிய பெங்களூரு அணி எளிதாக சேஸ் செய்து வெற்றி பெற்றது.

இந்த போட்டியில் முதல் விக்கெட்டிற்கு விராட் கோலியும் – டூப்ளசிசும் 148 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். கோலி 82 ரன்னும், டூப்ளசிஸ் 73 ரன்களும் எடுத்தனர். குறிப்பாக உலகின் முன்னணி வேகப்பந்து வீச்சாளராக இருக்கும் ஜோஃப்ரா ஆர்ச்சரின் பந்து வீச்சை விராட் கோலி சர்வ சாதாரணமாக எதிர்கொண்டு விளையாடினார். மற்ற பவுலர்களை விடவும் ஆர்ச்சரை விராட்கோலி எதிர்கொண்ட விதம் சர்வதேச கிரிக்கெட் ரசிகர்களுக்கு வியப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து கிரிக்கெட் விமர்சகர்கள் கூறியதாவது-

top videos

    டாடா ஐபிஎல் தொடரில் மிகப்பெரும் சூப்பர் ஸ்டாராக விராட் கோலி இருக்கிறார். அவர் பவுர்ணமியைப் போன்று ஒளிர்ந்து இந்திய ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளார். இந்த சீசனை பாசிடிவான வெற்றியுடன் விராட் கோலி தொடங்கியுள்ளார். கடந்த சீசனில் அவர் அதிக ரன்களை குவிக்கவில்லை. இருப்பினும் ரசிகர்கள் அவர் மீது மிகுந்த நம்பிக்கை வைத்தனர். மீண்டும் தான் ஒரு சிறந்த ஆட்டக்காரர் என்பதை விராட் கோலி நிரூபித்துள்ளார். அதிக திறமை வாய்ந்த ஜோஃப்ரா ஆர்ச்சருக்கு எதிராக விராட் கோலி ஆடிய விதம் இந்திய கிரிக்கெட்டிற்கு கிடைத்த வெற்றியாகும். டூப்ளசிஸ் – விராட்கோலி இருவரும் அதிவேகமாக ஓடி ரன்களை எடுத்தனர். இதிலிருந்து இளம் வீரர்கள் கற்றுக் கொள்ள வேண்டும். 34 வயதுடைய விராட் கோலி ஓடும் வேகத்தை பார்க்கும் போது அவர் எவ்வளவு ஃபிட்டாக இருக்கிறார் என்பதை புரிந்து கொள்ள முடிகிறது. அவர் பெங்களூரூ அணியில் பாசிடிவான எனர்ஜியை கொண்டு வந்துள்ளார். பேட்டிங்கில் அவர் தொடர்ந்து ரன்களை குவித்து வருவது அணிக்கு பலம் சேர்க்கிறது. உலகில் முன்னணி பவுலராக இருக்கும் ஜோஃப்ரா ஆர்ச்சரை அவர் எதிர்கொண்ட விதம் கிரிக்கெட் உலகில் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ளனர்.

    First published:

    Tags: IPL, IPL 2023