முகப்பு /செய்தி /விளையாட்டு / IPL 2023 : 8 போட்டிகளில் 5 அரைச் சதம்… சூப்பர் ஃபார்மில் விராட் கோலி

IPL 2023 : 8 போட்டிகளில் 5 அரைச் சதம்… சூப்பர் ஃபார்மில் விராட் கோலி

விராட் கோலி

விராட் கோலி

கொல்கத்தா அணிக்கு எதிராக விராட் கோலி அடித்த 54 ரன்களுடன் சேர்த்து கடந்த 8 போட்டிகளில் 5 அரைச் சதங்களுடன் ஐபிஎல் தொடரில் 393 ரன்களை எடுத்துள்ளார்.

  • Last Updated :
  • Tamil Nadu, India

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் பெங்களூரு அணியின் கேப்டன் விராட் கோலி கடந்த 8 போட்டிகளில் 5 அரைச்சதங்களை அடித்துள்ளார். பெங்களூரு அணி மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தினாலும், விராட் கோலியின் பேட்டிங் ரசிகர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. மும்பை அணிக்கு எதிராக நடந்த முதல் போட்டியில் 82 ரன்களும், கொல்கத்தாஅணிக்கு எதிரான போட்டியில் 21 ரன்களும், லக்னோ அணிக்கு எதிராக 61 ரன்களும், டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் 50 ரன்களும் விராட் கோலி எடுத்துள்ளார்.

அடுத்து நடந்த சென்னை அணிக்கு எதிரான ஆட்டத்தில் 6 ரன்கள் மட்டுமே எடுத்த விராட் கோலி பஞ்சாப் அணியுடனான போட்டியில் 59 ரன்னும், ராஜஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்தில் ரன் ஏதும் எடுக்காமலும் ஆட்டமிழந்தார். இந்நிலையில் இன்று நடைபெற்ற கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் பெங்களூரு அணி வெற்றி பெற 201 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. இந்த போட்டியில் தொடக்க வீரராக களம் இறங்கிய விராட் கோலி 6 பவுண்டரியுடன் 37 பந்துகளில் 54 எடுத்து அசத்தினார்.

top videos

    கொல்கத்தா அணிக்கு எதிராக விராட் கோலி அடித்த 54 ரன்களுடன் சேர்த்து கடந்த 8 போட்டிகளில் 5 அரைச் சதங்களுடன் ஐபிஎல் தொடரில் 393 ரன்களை எடுத்துள்ளார். ஐபிஎல் தொடரில் இன்னும் 6 போட்டிகள் மீதம் உள்ள நிலையில் விராட் கோலி சூப்பர் ஃபார்மில் இருப்பதால் 600 ரன்களுக்கும் அதிகமாக எடுப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    First published:

    Tags: IPL, IPL 2023