முகப்பு /செய்தி /விளையாட்டு / IPL 2023 : மும்பை அணி வெற்றி பெற 186 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது கொல்கத்தா நைட் ரைடர்ஸ்…

IPL 2023 : மும்பை அணி வெற்றி பெற 186 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது கொல்கத்தா நைட் ரைடர்ஸ்…

சதம் அடித்த வெங்கடேஷ் ஐயர்

சதம் அடித்த வெங்கடேஷ் ஐயர்

விக்கெட்டுகள் ஒருபக்கம் விழுந்தாலும் பேட்ஸ்மேன் வெங்கடேஷ் ஐயர் அதிரடி ஆட்டத்தை தொடர்ந்தார்.

  • Last Updated :
  • Tamil Nadu, India

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெற்று வரும் மும்பை – கொல்கத்தா அணிகளுக்கு இடையிலான ஆட்டத்தில் மும்பை அணி வெற்றி பெற186 ரன்கள் இலக்கு நிர்ணயித்துள்ளது கொல்கத்தா அணி. இந்த போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ் பந்து வீச்சை முதலில் தேர்வு செய்தார். இதையடுத்து கொல்கத்தா அணியின் பேட்ஸ்மேன்களாக ரஹ்மானுல்லா குர்பாஸ் மற்றும் என். ஜெகதீசன் ஆகியோர் களத்தில் இறங்கினர். ஜெகதீசன் ரன் ஏதும் எடுக்காமல் க்ரீன் பந்துவீச்சில் ஹிருத்திக் ஷோகீனிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.

குர்பாஸ் 8 ரன்னில் ஆட்டமிழக்க அடுத்து வந்த கேப்டன் நிதிஷ் ராணா 5 ரன்னில் விக்கெட்டை பறி கொடுத்தார். விக்கெட்டுகள் ஒருபக்கம் விழுந்தாலும் பேட்ஸ்மேன் வெங்கடேஷ் ஐயர் அதிரடி ஆட்டத்தை தொடர்ந்தார். அவருக்கு பார்ட்னர்ஷிப் கொடுக்க மற்ற பேட்ஸ்மேன்கள் தவறியதால் ரன் குவிப்பு கட்டுப்படுத்தப்பட்டது.

top videos

    அதிரடி ஆட்டத்தால் சதம் அடித்த வெங்கடேஷ் ஐயர் 51 பந்துகளில் 104 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். இதில் 9 சிக்சரும் 6 பவுண்டரியும் அடங்கும். ஷர்துல் தாகூர் 13 ரன்களும், ரிங்கு சிங் 18 ரன்களும் சேர்க்க கடைசி ஓவர்களில் அதிரடியாக விளையாடிய ஆண்ட்ரே ரஸல் 21 ரன்கள் எடுத்தார். 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்த கொல்கத்தா அணி 185 ரன்களை எடுத்துள்ளது. இதையடுத்து 186 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி மும்பை அணி வீரர்கள் களத்தில் இறங்கியுள்ளனர்.

    First published:

    Tags: IPL, IPL 2023