முகப்பு /செய்தி /விளையாட்டு / IPL 2023 : கோலி தலைமையில் ஆர்.சிபி.யின் வெற்றிப் பயணம் தொடருமா? இன்று கொல்கத்தாவுடன் மோதல்

IPL 2023 : கோலி தலைமையில் ஆர்.சிபி.யின் வெற்றிப் பயணம் தொடருமா? இன்று கொல்கத்தாவுடன் மோதல்

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களுர் அணி

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களுர் அணி

இன்று போட்டி நடைபெறும் பெங்களூரு சின்னசாமி மைதானம் பேட்டிங்கிற்கு ஏற்ற வகையில் இருக்கும். மிக அதிகமான ஸ்கோர்கள் இந்த மைதானத்தில் எடுக்கப்பட்டுள்ளன

  • Last Updated :
  • Tamil Nadu, India

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் கோலி தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி இன்று கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை எதிர்கொள்கிறது. பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் இந்த போட்டி இன்றிரவு 7.30 மணிக்கு தொடங்கவுள்ளது. ராஜஸ்தான் அணிக்கு எதிராக நடந்த கடைசிப் போட்டியில் பெங்களூரு அணி வெற்றி பெற்றுள்ளது. கோலி தலைமையில் அந்த அணி எதிர்கொண்ட 2 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ள நிலையில், இன்று கொல்கத்தா அணியுடன் மோதுகிறது.

சென்னை அணிக்கு எதிராக நடைபெற்ற கடைசி போட்டியில் நிதிஷ் ராணா தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி தோல்வியடைந்தது. ஐபிஎல் பாயின்ட்ஸ் டேபிளில் கொல்கத்தா அணி 8 ஆவது இடத்திலும் பெங்களூரு அணி 5 ஆவது இடத்திலும் உள்ளன. இந்த போட்டியில் பெங்களூரு அணி வெற்றி பெற்றால் 5 வெற்றிகளுடன் 3 ஆவது இடத்திற்கு முன்னேறி விடும். அதே நேரம் பெங்களூரு அணியின் நெட் ரன் ரேட் -0.008 என்ற அளவில் குறைவாக இருப்பது அணிக்கு பலவீனமாக பார்க்கப்படுகிறது.

top videos

    ஐபிஎல்லை பொருத்தளவில் அதிகபட்சம் 4 அணிகள் வரை ஒரே மாதிரியான பாயின்ட்டுகளை பெறுவதற்கு வாய்ப்புகள் உள்ளன. அவற்றிலிருந்து நெட் ரன் ரேட் மட்டுமே மற்ற அணிகளை வித்தியாசப்படுத்திக் காட்டுகிறது. இன்று போட்டி நடைபெறும் பெங்களூரு சின்னசாமி மைதானம் பேட்டிங்கிற்கு ஏற்ற வகையில் இருக்கும். மிக அதிகமான ஸ்கோர்கள் இந்த மைதானத்தில் எடுக்கப்பட்டுள்ளன. குறிப்பாக சேஸிங் செய்யும் அணிகள் அதிகமுறை வெற்றி பெற்றுள்ளன என்பதால்  டாஸ் வெல்லும் அணியின் கேப்டன் பவுலிங்கை முதலில் தேர்வு செய்ய வாய்ப்புள்ளது. இதேபோன்று முதலில் பேட்டிங் செய்யும் அணி மிகப்பெரிய இலக்கை எட்டினால், எதிரணிக்கு அழுத்தம் ஏற்படக்கூடும். இந்த போட்டியில் பெங்களூரு அணியின் ஆடும் லெவெனில் கோலி, டூப்ளசிஸ், மஹிபால் லோம்ரோர், மேக்ஸ்வெல், ஷாபாஸ் அகமது, தினேஷ் கார்த்திக், டேவிட் வில்லி, வனிந்து ஹசரங்கா, ஹர்ஷல் படேல், சிராஜ், விஜய்குமார்வைஷாக் ஆகியோர் இடம்பெறலாம். கொல்கத்தா அணியில் ஜெகதீசன், ஜேசன் ராய், வெங்கடேஷ் ஐயர், நிதிஷ் ராணா, ரிங்கு சிங், ஆண்ட்ரே ரசல், சுனில் நரேன், லோக்கி பெர்கூசன், குல்வந்த் கெஜ்ரோலியா, உமேஷ் யாதவ், வருண் சக்கரவர்த்தி ஆகியோர் இடம்பெறலாம்

    First published:

    Tags: IPL, IPL 2023