ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் பாயின்ட்ஸ் டேபிளில் கடைசி இடங்களில் இருக்கும் சன்ரைசர்ஸ் ஐதராபாத் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகள் இன்று மோதுகின்றன. இந்த ஆட்டம் ஐதராபாத் ராஜிவ் காந்தி மைதானத்தில் இரவு 7.30 மணிக்கு தொடங்குகிறது. இதுவரை விளையாடிய 6 போட்டிகளில் 1இல் மட்டுமே வெற்றிபெற்றுள்ள டெல்லி கேபிடல்ஸ் அணி பாயின்ட்ஸ் டேபிளில் 10 ஆவது இடத்தையும், 6 போட்டிகளில் 2 இல் வெற்றிபெற்று சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி 9 ஆவது இடத்திலும் உள்ளன. சன்ரைசர்ஸ் அணி கடைசிய சென்னைக்கு எதிரான ஆட்டத்தில் தோல்வியடைந்தது.
ஐதராபாத் அணியின் பேட்டிங் வரிசையில் ஹேரி புரூக், அபிஷேக் சர்மா, ராகுல் திரிபாதி, எய்டன் மார்க்ரம், மயங்க் அகர்வால் உள்ளிட்ட நட்சத்திர வீரர்கள் இருந்தாலும் மிக மெதுவான ஆட்டம் காரணமாக அந்த அணி தோல்வியை தழுவி வருகிறது. பந்துவீச்சில் வாஷிங்டன் சுந்தர், மயங்க் மார்கண்டேவை தவிர்த்து மற்றவர்கள் எதிர்பார்த்த ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை.
டேவிட் வார்னர் தலைமையிலான டெல்லி அணி தான் விளையாடிய முதல் 5 போட்டிகளில் தோல்வியடைந்தது. கடைசியாக கொல்கத்தா அணிக்கு எதிரான ஆட்டத்தில் டெல்லி வெற்றி பெற்ற நிலையில், இன்று சன்ரைசர்சை எதிர்கொள்கிறது. இந்த அணியின் கேப்டன் வார்னர், துணை கேப்டன் அக்சர் படேலை தவிர்த்து மற்றவர்கள் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். குறிப்பாக மிட்செல் மார்ஷ், பிரித்வி ஷா ஆகியோர் ரன் குவிக்க தவறுவதால் அணி பல முறை தடுமாறியுள்ளது. இன்றைய ஆட்டத்தில் ஆல் ரவுண்டர் மிட்செல் மார்ஷுக்கு பதிலாக ரோவ்மன் பவெல், ரிலீ ரூசோ ஆகியோரில் ஒருவருக்கு வாய்ப்பு அளிக்கப்படலாம். ஆமை வேக ஆட்டத்தால் மணிஷ் பாண்டே ரசிகர்களின் பொறுமையை சோதித்தார். அவருக்கு இந்த போட்டியில் வாய்ப்பு அளிக்கப்படாது என்று எதிர்பார்க்கப்படுகிறது. இரு அணிகளுக்கும் இன்னும 8 போட்டிகள் மீதம் இருப்பதால் ப்ளே ஆஃப் சுற்றுக்கான வாய்ப்புகள் உயிர்ப்புடன் உள்ளன.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.