முகப்பு /செய்தி /விளையாட்டு / IPL 2023 : சி.எஸ்.கே. மேட்ச்சை குடும்பத்துடன் கண்டு ரசித்த தமிழக முதல்வர் ஸ்டாலின்...

IPL 2023 : சி.எஸ்.கே. மேட்ச்சை குடும்பத்துடன் கண்டு ரசித்த தமிழக முதல்வர் ஸ்டாலின்...

மனைவி மற்றும் மகனுடன் தமிழக முதல்வர் ஸ்டாலின்

மனைவி மற்றும் மகனுடன் தமிழக முதல்வர் ஸ்டாலின்

சேப்பாக்கம் மைதானத்தை பொருத்தவரையில் இங்கு விளையாடிய 23 போட்டிகளில் சென்னை அணி 19-இல் வெற்றி பெற்றுள்ளது.

  • Last Updated :
  • Tamil Nadu, India

சென்னை மற்றும் ஐதராபாத் அணிகளுக்கு இடையே சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற்று வரும் கிரிக்கெட் போட்டியை முதல்வர் ஸ்டாலின் தனது குடும்பத்தினருடன் கண்டு ரசித்தார். முதல்வர் ஸ்டாலின் உடன் அவரது மனைவி துர்கா ஸ்டாலின், மகனும் விளையாட்டுத்துறை அமைச்சருமான உதயநிதி உள்ளிட்டோரும் போட்டியை கண்டு மகிழ்ந்தனர். சென்னை அணியின் மஞ்சள் வண்ண ஜெர்ஸியை அணிந்து ஸ்டாலின் சேப்பாக்கம் மைதானத்திற்கு வருகை புரிந்தார். முன்னதாக முதல்வரின் வருகையையொட்டி சேப்பாக்கம் மைதானத்தை சுற்றிலும் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டிருந்தன.

ஐதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணியின் கேப்டன் தோனி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளார். இதையடுத்து ஐதராபாத் அணியின் பேட்ஸ்மேன்கள் களத்தில் இறங்கி விளையாடி வருகின்றனர். சென்னையுடன் ஒப்பிடும்போது ஐதராபாத் அணி பலவீனமாக காணப்படுவதால், இன்றைய ஆட்டத்தில் அதிக விக்கெட் அல்லது ரன்கள் வித்தியாசத்தில் சென்னை அணி வெற்றி பெற்று, கூடுதல் நெட்ரன்ரேட்டை பெறும் என்று விமர்சகர்கள் கூறியுள்ளனர். தற்போது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 6 போட்டிகளில் 4 இல் வெற்றி பெற்று 8 புள்ளி மற்றும் +1.043 நெட் ரன் ரேட்டுடன் முதலிடத்திலும், லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் 8 புள்ளி மற்றும +0.709 நெட் ரன்ரேட்டுடன் 2 ஆவது இடத்திலும் உள்ளன. இன்றை போட்டியில் அதிக ரன் அல்லது விக்கெட் வித்தியாசத்தில் சன் ரைசர்ஸை சென்னை அணி வென்றால் 2 அல்லது முதலிடத்திற்கு முன்னேறும் வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. சேப்பாக்கம் மைதானத்தை பொருத்தவரையில் இங்கு விளையாடிய 23 போட்டிகளில் சென்னை அணி 19-இல் வெற்றி பெற்றுள்ளது.

இன்றைய போட்டியில் சென்னை அணியில் விளையடும் வீரர்கள்- ருதுராஜ் கெய்க்வாட், டெவோன் கான்வே, அஜிங்யா ரஹானே, ஷிவம் துபே, மொயீன் அலி, ரவீந்திர ஜடேஜா, எம்எஸ் தோனி, மகேஷ் தீக்ஷனா, துஷார் தேஷ்பாண்டே, ஆகாஷ் சிங், மதீஷா பத்திரனா

ஐதராபாத் அணியில் விளையாடும் வீரர்கள்- ஹாரி புரூக், மயங்க் அகர்வால், ராகுல் திரிபாதி, ஐடன் மார்க்ரம், ஹென்ரிச் கிளாசென், அபிஷேக் சர்மா, வாஷிங்டன் சுந்தர், மார்கோ ஜான்சன், புவனேஷ்வர் குமார், மயங்க் மார்கண்டே, உம்ரான் மாலிக்

top videos

    நடப்பு சீசனில் இதுவரை 5 போட்டிகளில் விளையாடியுள்ள சென்னை அணி 3 போட்டிகளில் வெற்றி பெற்று 6 புள்ளிகள் மற்றும் + 0.265 நெட் ரன் ரேட்டுடன் 3 ஆவது இடத்தில் உள்ளது. இதேபோன்று 5 போட்டிகளில் 2 இல் வெற்றி பெற்றுள்ள சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி 9 ஆவது இடத்தை பிடித்துள்ளது.

    First published:

    Tags: CM MK Stalin, IPL, IPL 2023