முகப்பு /செய்தி /விளையாட்டு / IPL 2023 : தோனி ஸ்டைலில் ஹெலிகாப்டர் ஷாட் அடித்த திலக் வர்மா… கவனம் ஈர்க்கும் வீடியோ…

IPL 2023 : தோனி ஸ்டைலில் ஹெலிகாப்டர் ஷாட் அடித்த திலக் வர்மா… கவனம் ஈர்க்கும் வீடியோ…

திலக் வர்மா

திலக் வர்மா

இடது கை ஆட்டக்காரரான அவர் சர்வ சாதாரணமாக சிக்சர் அடித்தது ரசிகர்களின் கவனத்தை பெற்றுள்ளது

  • Last Updated :
  • Tamil Nadu, India

தோனி ஸ்டைலில் மும்பை இந்தியன்ஸ் அணியின் அதிரடி பேட்ஸ்மேன் திலக் வர்மா ஹெலிகாப்டர் ஷாட்டில் சிக்சர் அடித்துள்ளார். இதுதொடர்பான வீடியோ ஒன்று கவனம் பெற்று வருகிறது. ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியிடம் 8 விக்கெட்வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.

முதலில் பேட்டிங் செய்த மும்பை அணி 20 ஓவர்கள் முடிவில் 171 ரன்களை எடுத்தது. இதையடுத்து 172 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி விளையாடிய பெங்களூரு அணி 18.2 ஓவரில் 2 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து வெற்றி இலக்கை எட்டியது. கேப்டன் டூப்ளசிஸ் 43 பந்துகளில் 73 ரன்களும், விராட் கோலி 49 பந்துகளில் 82 ரன்களும் எடுத்து வெற்றிக்கு உதவினர்.

top videos

    முன்னதாக மும்பை அணியில் திலக் வர்மா 46 பந்துகளில் 84 ரன்களை அதிரடியாக சேர்த்தார். அவர் ஆட்டத்தின் கடைசி பந்தை தோனியின் ஹெலிகாப்டர் ஷாட் முறையில் சிக்சருக்கு மாற்றினார். இடது கை ஆட்டக்காரரான அவர் சர்வ சாதாரணமாக சிக்சர் அடித்தது ரசிகர்களின் கவனத்தை பெற்றுள்ளது. இதுதொடர்பான வீடியோக்கள் வைரலாகியுள்ளன.

    First published:

    Tags: IPL, IPL 2023