முகப்பு /செய்தி /விளையாட்டு / IPL 2023 : ஐபிஎல் போட்டியை கண்டு ரசித்த தமிழக முதல்வர் ஸ்டாலின்…

IPL 2023 : ஐபிஎல் போட்டியை கண்டு ரசித்த தமிழக முதல்வர் ஸ்டாலின்…

தமிழக முதல்வர் ஸ்டாலின்

தமிழக முதல்வர் ஸ்டாலின்

கடந்த முறை மஞ்சள் நிற டி ஷர்ட் அணிந்து வந்த ஸ்டாலின் இந்த முறை நீல வண்ண சட்டையுடன் கூலர் அணிந்து போட்டியை கண்டு களித்தார்

  • Last Updated :
  • Tamil Nadu, India

சென்னை சேப்பாக்கத்தில் இன்று நடைபெற்ற சென்னை மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகளுக்கிடையிலான போட்டியை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டு ரசித்தார். ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் இன்றைய ஆட்டத்தில் பஞ்சாப் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதின. பரபரப்பான இந்த ஆட்டத்தில் கடைசி பந்தில் 3 ரன்கள் எடுத்து பஞ்சாப் அணி வெற்றி பெற்றது.

முதலில் பேட்டிங் செய்த சென்னை அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 200 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக தொடக்க வீரர் டெவோன் கான்வே 92 ரன்களும், ருதுராஜ் கெய்க்வாட் 37 ரன்களும், ஷிவம் துபே 28 ரன்களும் எடுத்தனர். பஞ்சாப் அணி தரப்பில் அர்ஷ்தீப் சிங், சாம் கரன், ராகுல் சஹார், சிக்கந்தர் ராசா ஆகியோர் தலா 1 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

top videos

    சென்னை அணியின் பேட்டிங்கின்போது தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சேப்பாக்கம் மைதானத்திற்கு வந்து, விளையாட்டை கண்டு ரசித்தார். கடந்த முறை மஞ்சள் நிற டி ஷர்ட் அணிந்து வந்த ஸ்டாலின் இந்த முறை நீல வண்ண சட்டையுடன் கூலர் அணிந்து போட்டியை கண்டு களித்தார். 201 ரன்கள் எடுததால் வெற்றி என்ற இலக்கை நோக்கி விளையாடிய பஞ்சாப் அணியின் பேட்ஸ்மேன்கள் 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து வெற்றி இலக்கை எட்டினர்.

    First published:

    Tags: IPL, IPL 2023