முகப்பு /செய்தி /விளையாட்டு / IPL 2023 : சென்னை – மும்பை மேட்ச்சில் ஆட்ட நாயகன் விருதை வழங்கும் சுரேஷ் ரெய்னா… இந்தியா சிமென்ட்ஸ் அறிவிப்பு

IPL 2023 : சென்னை – மும்பை மேட்ச்சில் ஆட்ட நாயகன் விருதை வழங்கும் சுரேஷ் ரெய்னா… இந்தியா சிமென்ட்ஸ் அறிவிப்பு

சுரேஷ் ரெய்னா

சுரேஷ் ரெய்னா

சுரேஷ் ரெய்னா முக்கியமான ஐபிஎல் போட்டிகளில் ஆட்டநாயகன் விருதை இந்தியா சிமென்ட்ஸ் சார்பாக வழங்குவார்

  • Last Updated :
  • Tamil Nadu, India

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெறவுள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் மோதும் போட்டியில் ஆட்டநாயகன் விருதை சுரேஷ் ரெய்னா அளிப்பார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முதன்மை விளம்பரதாரராக இந்தியா சிமென்ட்ஸ் நிறுவனம் உள்ளது. இந்த நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது- சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முதன்மை ஸ்பான்சராக இந்தியா சிமென்ட்ஸ் நிறுவனம் உள்ளது.  இதன் ஒரு பகுதியாக ஐபிஎல் ரசிகர்கள் மற்றும் இந்தியா சிமென்ட்ஸ் வாடிக்கையாளர்களின் அனுபவங்களை ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் அறிந்து வருகிறது. அந்த அடிப்படையில் அதிகமான ரசிகர்கள் ஆட்ட நாயகன் விருதை வழங்க சின்ன தல என்று அன்புடன் அழைக்கப்படும் சுரேஷ் ரெய்னாவை தேர்வு செய்துள்ளனர்.

சுரேஷ் ரெய்னா முக்கியமான ஐபிஎல் போட்டிகளில் ஆட்டநாயகன்  விருதை இந்தியா சிமென்ட்ஸ் சார்பாக வழங்குவார். அந்த வகையில் இன்று நடைபெறவுள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டியில் ஆட்ட நாயகன் விருதை ரெய்னா வழங்கவுள்ளார். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

top videos

    சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இதுவரை ஆடிய 10 ஆட்டங்களில் 5 வெற்றியுடன் பட்டியலில் மூன்றாவது இடத்தில் உள்ளது. பிளே-ஆஃப் வாய்ப்பை பிரகாசப்படுத்த இனி வரும் ஒவ்வொரு போட்டியும் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. அதேவேளையில், மும்பை அணி 9 போட்டிகளில் 5 வெற்றியுடன் ஆறாவது இடத்தில் உள்ளது. இருந்த போதும், கடைசியாக ராஜஸ்தான், பஞ்சாப் அணிகளுக்கு எதிராக 200 ரன்கள் இலக்கை எட்டிப் பிடித்து அசத்தியது. எனவே, ஹாட்ரிக் வெற்றி முனைப்பில் மும்பை அணி உள்ளது. மேலும், சென்னை அணிக்கு எதிராக முந்தைய லீக் ஆட்டத்தில் சந்தித்த தோல்விக்கு பதிலடி கொடுக்கவும் முனைப்பு காட்டி வருகிறது.

    First published:

    Tags: IPL, IPL 2023, Suresh Raina