முகப்பு /செய்தி /விளையாட்டு / IPL 2023 : ராஜஸ்தானுக்கு எதிரான போட்டியில் பவுலிங்கை தேர்வு செய்தது சன்ரைசர்ஸ்…

IPL 2023 : ராஜஸ்தானுக்கு எதிரான போட்டியில் பவுலிங்கை தேர்வு செய்தது சன்ரைசர்ஸ்…

ஐதராபாத் - ராஜஸ்தான் அணி கேப்டன்கள்

ஐதராபாத் - ராஜஸ்தான் அணி கேப்டன்கள்

நீண்ட இடைவேளைக்கு பின்னர் தமிழக வீரர் நடராஜன் இன்றைய ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் அணிக்காக களம் இறங்குகிறார்.

  • Last Updated :
  • Tamil Nadu, India

ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்றுள்ள சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியின் கேப்டன் புவனேஸ்வர் குமார் பவுலிங்கை தேர்வு செய்துள்ளார். ஐபிஎல் கிரிக்கெட் தொடர் கடந்த வெள்ளியன்று தொடங்கி நடைபெற்று வருகிறது. தொடக்க போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணி வெற்றி பெற்றிருந்தது. நேற்று 2 ஆட்டங்கள் நடைபெற்றன. முதல் போட்டியில் கொல்கத்தா அணியை பஞ்சாப் கிங்சும், 2 ஆவது போட்டியில் டெல்லி அணியை லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியும் வீழ்த்தின.

இன்று மொத்தம் 2 போட்டிகள் நடைபெறுகிறது. முதல் போட்டியில் சன்ரைசர்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதுகின்றன. இதில் டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியின் கேப்டன் புவனேஸ்வர் குமார் பந்துவீச்சை முதலில் தேர்வு செய்துள்ளார். இந்த போட்டி ஐதராபாத் ராஜிவ் காந்தி மைதானத்தில் தொடங்கியுள்ளது. ராஜஸ்தான் அணிக்கு சஞ்சு சாம்சன் தலைமை வகிக்கிறார்.

சன்ரைசர்ஸ் அணியில் வெளிநாட்டு வீரர்களாக பரூக்கி, ஹேரி ப்ரூக், அடில் ரஷீத், கிளென் பிலிப்ஸ் ஆகியோர் இன்று விளையாடுகின்றனர். ராஜஸ்தான் அணியில் ஜோஸ் பட்லர், ஜேசன் ஹோல்டர், ட்ரென்ட் போல்ட் மற்றும் ஹெட்மேயர் ஆகிய வெளிநாட்டவர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

சன்ரைசர்ஸ் அணி வீரர்கள் - மயங்க் அகர்வால், அபிஷேக் ஷர்மா, ராகுல் திரிபாதி, ஹாரி புரூக், வாஷிங்டன் சுந்தர், கிளென் பிலிப்ஸ்(விக்கெட் கீப்பர்), உம்ரான் மாலிக், அடில் ரஷித், புவனேஷ்வர் குமார்(கேப்டன்), டி நடராஜன், ஃபசல்ஹாக் ஃபரூக்கி. ராஜஸ்தான் அணி வீரர்கள் - யஷஸ்வி ஜெய்ஸ்வால், ஜோஸ் பட்லர், சஞ்சு சாம்சன்(கேப்டன்), தேவ்தத் படிக்கல், ரியான் பராக், ஷிம்ரோன் ஹெட்மியர், ரவிச்சந்திரன் அஷ்வின், ஜேசன் ஹோல்டர், டிரென்ட் போல்ட், கே.எம். ஆசிப், யுஸ்வேந்திர சாஹல்.

top videos
    First published:

    Tags: IPL, IPL 2023