முகப்பு /செய்தி /விளையாட்டு / ‘தோனியைப் போல செயல்படுகிறார்…’ – ஐபிஎல் அணி கேப்டனை பாராட்டும் சுனில் கவாஸ்கர்

‘தோனியைப் போல செயல்படுகிறார்…’ – ஐபிஎல் அணி கேப்டனை பாராட்டும் சுனில் கவாஸ்கர்

கவாஸ்கர் - தோனி

கவாஸ்கர் - தோனி

கொல்கத்தா அணியின் தடுமாற்றத்திற்கு ஆண்ட்ரே ரஸல் ஃபார்ம் இன்றி தவிப்பதுதான் முக்கிய காரணம். அவர் மீண்டும் சிறப்பான ஆட்டத்திற்கு திரும்ப வேண்டும்.

  • Last Updated :
  • Tamil Nadu, India

தோனியைப் போன்று செயல்படுவதாக ஐபிஎல் அணியின் கேப்டனை சுனில் கவாஸ்கர் பாராட்டியுள்ளார். ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் சுனில் கவாஸ்கர் கூறியிருப்பதாவது- சில நேரங்களில் அணியின் கேப்டன் தன்னைப் போன்று செயல்பட வேண்டும் என்று அணி வீரர்களுக்கு அழுத்தம் கொடுப்பார்கள். இதனை சரியான  அணுகுமுறை என்று கூற முடியாது. வீரர்களை அவர்களது ஸ்டைவில் விளையாடச் செய்து அவர்களின் முழு திறமையை வெளியே கொண்டு வர வேண்டும். இதுதான் ஒரு கேப்டனின் முக்கிய பொறுப்பு. இதைத் தான் ஹர்திக் பாண்ட்யா குஜராத் டைட்டன்ஸ் அணியில் செய்து கொண்டிருக்கிறார்.

குஜராத் அணியில் யாரிடமும் தனது ஆளுமையை ஹர்திக் பாண்ட்யா திணிப்பது கிடையாது. இந்த பண்புகள் தோனியிடம் சிறப்பாக காணப்படும். அவரைப் போன்றுதான் ஹர்திக் பாண்ட்யாவும் செயல்படுகிறார். என்று கூறினார். முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங் அளித்துள்ள பேட்டியில், ‘கொல்கத்தா அணியின் தடுமாற்றத்திற்கு ஆண்ட்ரே ரஸல் ஃபார்ம் இன்றி தவிப்பதுதான் முக்கிய காரணம். அவர் மீண்டும் சிறப்பான ஆட்டத்திற்கு திரும்ப வேண்டும். இல்லாவிட்டால் கொல்கத்தா அணி அடுத்த சுற்றுக்கு தகுதி பெறுவது கடினம்தான்.

ரஸலுக்கு இருக்கும் பிரச்னையை எளிதாக சரி செய்ய முடியும். பயிற்சியாளரும் மற்ற உதவியாளர்களும் நினைத்தால் ரஸலின் அதிரடி ஆட்டத்தை திரும்ப கொண்டுவர முடியும்.’ என்றார். மற்றொரு முன்னாள் வீரர் இர்பான் பதான் டெல்லி அணியின் அக்சர் படேல் குறித்து கூறும் போது, ‘அக்சர் படேல் ஒரு தரமான ஆல் ரவுண்டர். அவர் பந்துவீசும் போது ஒவ்வொரு பந்திலும் வித்தியாசம் காட்டுகிறார். முக்கியமான விக்கெட்டுகளை அணிக்கு தேவை ஏற்படும் போது கைப்பற்றி விடுகிறார். முதிர்ந்த பேட்ஸ்மேன் எப்படி விளையாடுவாரோ அதேபோன்ற ஆட்டம் அக்சரிடம் வெளிப்படுகிறது. ஃபீல்டிங்கிலும் அக்சர் சிறப்பாக செயல்படுகிறார். டெல்லி அணியின் கேப்டனாக செயல்படும் தகுதி அக்சர் படேலிடம் இருப்பதாக கருதுகிறேன்’ என்று கூறினார்.

First published:

Tags: IPL, IPL 2023