முகப்பு /செய்தி /விளையாட்டு / ‘ரன் குவிக்க முடியாததால் அப்துல் சமத் விரக்தியில் இருந்தார்…’ – ஐதராபாத் பயிற்சியாளர் தகவல்

‘ரன் குவிக்க முடியாததால் அப்துல் சமத் விரக்தியில் இருந்தார்…’ – ஐதராபாத் பயிற்சியாளர் தகவல்

சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி வீரர் அப்துல் சமத்

சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி வீரர் அப்துல் சமத்

கடந்த போட்டியில் நாங்கள் தோற்றபோது அவர் என்னிடம் வந்து தான் இந்த ஆட்டத்தை வெற்றிகரமாக முடித்து கொடுத்திருக்க வேண்டும் என்று கூறினார்

  • Last Updated :
  • Tamil Nadu, India

ராஜஸ்தான் அணிக்கு எதிரான ஒரேயொரு ஓவரில் அப்துல் சமத் ஹீரோ ஆன நிலையில், முன்னதாக அவர் ரன் குவிக்க முடியாததால் விரக்தியில் இருந்ததாக அணியின் பேட்டிங் பயிற்சியாளர் ஹேமங் பதானி கூறியுள்ளார். சன்ரைசர்ஸ் ஐதராபாத் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதிய நேற்றைய ஆட்டம் இந்த தொடரில் மிகுந்த விறுவிறுப்பாக இருந்தது. முதலில் பேட் செய்த ராஜஸ்தான் அணி 214 ரன்கள் குவிக்க, 215 ரன்களை நோக்கி ஐதராபாத் அணி சேஸிங்கை தொடங்கியது.

ஐதராபாத் வெற்றி பெற கடைசி ஓவரில் 17 ரன்கள் தேவைப்பட்டபோது, அதை அந்த அணியின் அப்துல் சமத் எதிர்கொள்ள ராஜஸ்தானின் சந்தீப் சர்மா வீசினார். முதல் பந்தில் 2 ரன்கள் எடுக்கப்பட்டதை தொடர்ந்து அடுத்த பந்து சிக்சருக்கு பறந்தது. 3 ஆவது பந்தில் 2 ரன்களும், அடுத்த 2 பந்துகளில் தலா 1 ரன் என மொத்தம் 5 பந்துகளில் 12 ரன்கள் எடுக்கப்பட்டது. கடைசி பந்தில் ஐதராபாத் வெற்றி பெற 5 ரன்கள் தேவைப்பட்டபோது, அதனை நோ பாலாக சந்தீப் வீச, கடைசி பந்தில் சிக்சர் அடித்தார் அப்துல் சமத்.

top videos

    இந்த வெற்றியின் மூலம், சமதை ஐதராபாத் அணியின் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில், அவர் குறித்து அணியின் பேட்டிங் பயிற்சியாளர் ஹேமங் பதானி கூறியதாவது- ராஜஸ்தான் அணிக்கு எதிராக நாங்கள் பெற்ற வெற்றி மிகவும் குறிப்பிடத்தக்க ஒன்று. முன்னதாக கொல்கத்தா அணிக்கு எதிரான ஆட்டத்தில் கடைசி ஓவரில் 9 ரன்கள் தேவைப்பட்டபோது அதை எடுக்க தவறினோம். டெல்லிக்கு எதிரான ஆட்டத்திலும் நாங்கள் வெற்றி பெற்றிருக்க வேண்டும். சில ஆட்டங்களால் நாங்கள் பாயின்ட்ஸ் டேபிளில் கடைசி நிலையில் இருக்கிறோம். ராஜஸ்தானுக்கு எதிரான மேட்ச்சில் அப்துல் சமத் மிக சிறப்பாக விளையாடினார். கடந்த போட்டியில் நாங்கள் தோற்றபோது அவர் என்னிடம் வந்து தான் இந்த ஆட்டத்தை வெற்றிகரமாக முடித்து கொடுத்திருக்க வேண்டும் என்று கூறினார். அந்த ஆட்டத்தில் நாங்கள் தோற்றது குறித்த சமத் கவலையுடன் இருந்தார். அவரை ஐதராபாத் அணி தக்க வைத்திருந்தது. அதன் காரணமாக அவர் கூடுதல் மன வருத்தத்துடன் இருந்திருக்கலாம். ஆனால் ராஜஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் சமத் தன்னுடைய திறமையை நிரூபித்துள்ளார். இவ்வாறு அவர் கூறினார்.

    First published:

    Tags: IPL, IPL 2023