முகப்பு /செய்தி /விளையாட்டு / ஐபிஎல் போட்டிகளில் அரிதான சாதனை… டேவிட் வார்னர், விராட் கோலியுடன் இணைந்த ஷிகர் தவான்

ஐபிஎல் போட்டிகளில் அரிதான சாதனை… டேவிட் வார்னர், விராட் கோலியுடன் இணைந்த ஷிகர் தவான்

ஷிகர் தவான்

ஷிகர் தவான்

நடப்பு சீசனில் ஷிகர் தவான் 349 ரன்கள் சேர்த்துள்ளார். சராசரி 58.16 ரன்கள். ஸ்ட்ரைக் ரேட் 143.62.

  • Last Updated :
  • Tamil Nadu, India

ஐபிஎல் போட்டிகளில் புதிய சாதனை படைத்துள்ள பஞ்சாப் கிங்ஸ் அணியின் கேப்டன் ஷிகர் தவான் டேவிட் வார்னர் மற்றும் விராட் கோலியின் வரிசையில் இணைந்துள்ளார். ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் மற்றும் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணிகள் மோதின. இந்த போட்டியில் பஞ்சாப் அணியின் கேப்டன் ஷிகர் தவான் 47 பந்துகளில் 57 ரன்கள் எடுத்தார். ஐபிஎல் தொடரில் அவர் அடித்த 50 ஆவது அரைச்சதமாக இது அமைந்தது.

இந்த தொடரில் ஒட்டுமொத்தமாக 50 அரைச்சதங்களை விராட் கோலி மற்றும் டேவிட் வார்னர் ஆகியோர் மட்டுமே கடந்துள்ளனர். அந்த சாதனையாளர்கள் வரிசையில் தற்போது ஷிகர் தவானும் இணைந்துள்ளார். டேவிட் வார்னர் 61 அரைச்சதங்களும், 4 சதங்களும் அடித்துள்ளார். விராட் கோலி 55 அரைச் சதங்களும், 5 சதங்களும் பதிவு செய்துள்ளார். இதேபோன்று ஐபிஎல் தொடரில் அதிக ரன்களை எடுத்தவர்கள் பட்டியலில் விராட் கோலி 7,043 ரன்களுடன் முதலிடத்திலும், டேவிட் வார்னர் 6,211 ரன்களுடன் 2 ஆவது இடத்திலும் உள்ளனர்.

top videos

    நடப்பு சீசனில் ஷிகர் தவான் 349 ரன்கள் சேர்த்துள்ளார். சராசரி 58.16 ரன்கள். ஸ்ட்ரைக் ரேட் 143.62. இந்த சீசனில் மட்டும் தவான் 3 அரைச்சதங்களை அடித்துள்ளார். அதிகபட்ச ஸ்கோர் 99 ரன்னாக உள்ளது.

    First published:

    Tags: IPL, IPL 2023