முகப்பு /செய்தி /விளையாட்டு / IPL 2023 : கொல்கத்தா அணிக்கு எதிரான ஆட்டத்தில் பெங்களூரு பந்துவீச்சு

IPL 2023 : கொல்கத்தா அணிக்கு எதிரான ஆட்டத்தில் பெங்களூரு பந்துவீச்சு

பெங்களூரு அணியின் கேப்டன் விராட் கோலி

பெங்களூரு அணியின் கேப்டன் விராட் கோலி

பாயின்ட்ஸ் டேபிளில் 5 ஆவது இடத்தில் இருக்கும் பெங்களூரு அணி இந்த போட்டியில் வெற்றி பெற்றால் 3 ஆவது இடத்திற்கு முன்னேறும்.

  • Last Updated :
  • Tamil Nadu, India

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் கொல்கத்தா அணிக்கு எதிரான ஆட்டத்தில் டாஸ் வென்றுள்ள பெங்களூரு அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. இதையடுத்து கொல்கத்தா அணியின் பேட்ஸ்மேன்கள் களத்தில் இறங்கியுள்ளனர். பாயின்ட்ஸ் டேபிளில் 5 ஆவது இடத்தில் இருக்கும் பெங்களூரு அணி இந்த போட்டியில் வெற்றி பெற்றால் 3 ஆவது இடத்திற்கு முன்னேறும்.

கொல்கத்தா அணியில் இன்று விளையாடும் வீரர்கள்- என் ஜெகதீசன், ஜேசன் ராய், வெங்கடேஷ் ஐயர், நிதிஷ் ராணா, ரின்கு சிங், ஆண்ட்ரே ரஸ்ஸல், சுனில் நரைன், டேவிட் வைஸ், வைபவ் அரோரா, உமேஷ் யாதவ், வருண் சக்கரவர்த்தி

பெங்களூரு அணியில் இன்று விளையாடும் வீரர்கள் - விராட் கோலி, ஷாபாஸ் அகமது, கிளென் மேக்ஸ்வெல், மஹிபால் லோம்ரோர், தினேஷ் கார்த்திக், சுயாஷ் பிரபுதேசாய், வனிந்து ஹசரங்கா, டேவிட் வில்லி, விஜய்குமார் வைஷாக், ஹர்சல் படேல், முகமது சிராஜ்

top videos

    ராஜஸ்தான் அணிக்கு எதிராக நடந்த கடைசிப் போட்டியில் பெங்களூரு அணி வெற்றி பெற்றுள்ளது. கோலி தலைமையில் அந்த அணி எதிர்கொண்ட 2 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ள நிலையில், இன்று கொல்கத்தா அணியுடன் மோதுகிறது. சென்னை அணிக்கு எதிராக நடைபெற்ற கடைசி போட்டியில் நிதிஷ் ராணா தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி தோல்வியடைந்தது. ஐபிஎல் பாயின்ட்ஸ் டேபிளில் கொல்கத்தா அணி 8 ஆவது இடத்திலும் பெங்களூரு அணி 5 ஆவது இடத்திலும் உள்ளன. இந்த போட்டியில் பெங்களூரு அணி வெற்றி பெற்றால் 5 வெற்றிகளுடன் 3 ஆவது இடத்திற்கு முன்னேறி விடும். அதே நேரம் பெங்களூரு அணியின் நெட் ரன் ரேட் -0.008 என்ற அளவில் குறைவாக இருப்பது அணிக்கு பலவீனமாக பார்க்கப்படுகிறது.

    First published:

    Tags: IPL, IPL 2023