முகப்பு /செய்தி /விளையாட்டு / IPL 2023 : லக்னோ அணிக்கு எதிரான போட்டியில் ஆர்.சி.பி. பேட்டிங்…

IPL 2023 : லக்னோ அணிக்கு எதிரான போட்டியில் ஆர்.சி.பி. பேட்டிங்…

கே.எல். ராகுல் - விராட் கோலி

கே.எல். ராகுல் - விராட் கோலி

பெங்களூரு அணியில் விராட் கோலி, டூப்ளசிஸ், மேக்ஸ்வெல்லை தவிர்த்து மற்ற பேட்ஸ்மேன்கள் இந்த தொடர் முழுவதும் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.

  • Last Updated :
  • Tamil Nadu, India

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் லக்னோ அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்றுள்ள பெங்களூரு அணி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது. இந்த சீசனில் மொத்தம் 8 போட்டிகளில் விளையாடியுள்ள லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி 5 போட்டிகளில் வெற்றி பெற்று 10 புள்ளிகளுடன் பாயின்ட்ஸ் டேபிளில் 2 ஆவது இடத்தை பிடித்துள்ளது. இதேபோன்று 8 போட்டிகளில் விளையாடி 4 போட்டிகளில் வென்றுள்ள பெங்களூரு அணி 8 புள்ளிகளுடன் 6 ஆவது இடத்தில் உள்ளது.

லக்னோ அணியின் நெட் ரன் ரேட் அதிகம் இருப்பதால் இன்றைய போட்டியில் பெங்ளூரு அணியை வீழ்த்தினால் முதலிடத்திற்கு முன்னேறி விடும். பெங்களூரு அணி -0.139 நெட் ரன் ரேட்டை கொண்டுள்ளது. இன்றைய போட்டியில் லக்னோவை வென்றால் பெங்களூரு அணி 5 ஆவது இடத்திற்கு முன்னேற வாய்ப்புள்ளது. லக்னோ அணியின் பேட்டிங் வரிசை அசுர பலத்துடன் காணப்படுகிறது. மார்கஸ் ஸ்டாய்னிஸ், கைல் மேயர்ஸ், நிகோலஸ் பூரன், ஆயுஷ் பதோனி ஆகிய பேட்ஸ்மேன்கள் அதிரடியாக விளையாடி எதிரணி பவுலர்களை கலங்கடித்துள்ளனர்.

top videos

    பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிராக லக்னோ அணி கடந்த போட்டியில் 257 ரன்களை குவித்தது. ஐபிஎல் போட்டியில் எடுக்கப்பட்ட அதிகபட்சமான 2 ஆவது ஸ்கோராக  இது அமைந்தது. அமித் மிஷ்ரா, ஆவேஷ் கான், நவீன் உல் ஹக், ரவி பிஷ்னோய் ஆகியோர் சிறப்பாக பந்துவீசி வருவதால் லக்னோ அணியை எளிதில் வெல்வது இயலாத காரியம். பெங்களூரு அணியில் விராட் கோலி, டூப்ளசிஸ், மேக்ஸ்வெல்லை தவிர்த்து மற்ற பேட்ஸ்மேன்கள் இந்த தொடர் முழுவதும் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளனர். பவுலிங்கில் சிராஜை தவிர்தது மற்ற வீரர்கள் நம்பிக்கை அளிக்கவில்லை. இதன் அடிப்படையில் இன்றைய ஆட்டத்தில் பெங்களூருவை விட லக்னோ அணியே அதிக பலமுடன் காணப்படுகிறது.

    First published:

    Tags: IPL, IPL 2023