ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் வலுவான லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியை ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி எதிர்கொள்கிறது. இந்த போட்டி இன்றிரவு 7.30-க்கு பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெறவுள்ளது. ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் கடந்த மாதம் 31ஆம் தேதி தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. ரசிர்களின் எதிர்பார்ப்பை மிஞ்சும் வகையில் நடப்பு சீசனில் போட்டிகள் அமைந்துள்ளன. நேற்று நடைபெற்ற குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் கொல்கத்தா அணி வீரர் ரிங்கு சிங் கடைசி ஓவரில் 5 சிக்சர்ளை அடித்து அணியை வெற்றி பெற வைத்தார். இந்த நிகழ்வு கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் டூப்ளசிஸ் தலைமையிலான பெங்களூரு அணி கே.எல். ராகுல் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியை இன்று எதிர்கொள்கிறது பெங்களூரு அணி தனது முதல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியை வென்றது. இந்த போட்டியில் கேப்டன் டூப்ளசிஸ் 73 ரன்களும், விராட் கோலி 82 ரன்களும் எடுத்து அசத்தினர். 2 ஆவது போட்டியில் கொல்கத்தாவை எதிர்கொண்ட பெங்களூரு அணி 81 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வியடைந்தது.
நடப்பு சீசனில் பெங்களூரு அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுததும் என்ற ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில் 2ஆவது போட்டியில் அந்த அணி தோல்வியடைந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில் உள்ளூரில் இன்று லக்னோவை எதிர்கொள்ளும் பெங்களூரு வெற்றிப் பாதைக்கு திரும்புமா என்ற எதிர்பார்ப்பில் ரசிகர்கள் உள்ளனர். லக்னோ அணியை பொருத்தளவில் இதுவரை 3 போட்டிகளில் விளையாடி டெல்லி மற்றும் ஐதராபாத் அணிகளுக்கு எதிராக வெற்றியையும், சென்னை அணிக்கு எதிராக தோல்வியையும் பெற்றுள்ளது. பெங்களூரு மற்றும் லக்னோ அணிகளில் பேட்டிங் மற்றும் பவுலிங்கை பொருத்தளவில் திறமை வாய்ந்த வீரர்கள் உள்ளனர். இதனால் இன்றைய ஆட்டம் மிகுந்த விறுவிறுப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.