நடப்பு ஐபிஎல் தொடரில் பெங்களூரு அணி இதுவரை 7 போட்டிகளில் விளையாடி 4 போட்டிகளில் வெற்றி பெற்று 5ஆவது இடத்தில் உள்ளது.
பெங்களுர் அணியில் மற்ற வீரர்கள் அதிகமாக சோபிக்காவிட்டாலும் கே.ஜி.எஃப் வீரர்கள் என கூறப்படும் விராட் கோலி, ஃபேப் டு பிளிசிஸ், க்ளைன் மேக்ஸ்வெல் ஆகிய வீரர்கள் மட்டுமே அணியை வெற்றி பாதைக்கு அழைத்து செல்கிறார்கள்.
இதுவரை இந்த ஐபிஎல் சீசனில் 47 அரைசதங்கள் அடிக்கப்பட்டுள்ளன. அதில் பெங்களுர் அணியில், விராட் கோலி, ஃபேப் டு பிளிசிஸ், மேக்ஸ்வெல் ஆகிய மூன்று வீரர்கள் மட்டும் 12 அரைசதங்கள் விளாசி, அதிக அரைசதங்கள் அடித்த அணி என்ற பெயரை பெற்றுள்ளார்கள்.
ஃபேப் டு பிளிசிஸ் 5 அரைசதங்களுடனும், விராட் கோலி 4 அரைசதங்களுடனும், மேக்ஸ்வெல் 3 அரைசதங்களுடனும் அணியின் முன்னணி நாயகர்களாக விளங்குகிறார்கள். இவர்களின் ஆட்டத்தால் பெங்களூர் அணியின் தூணாக இருந்தாலும், மற்ற வீரர்கள் இவர்களை போல தங்களது ஆட்டத்தை வெளிப்படுத்தாதது இந்த அணியின் பலவீனமாக உள்ளது.
பவுலிங்கை பொறுத்தவரையிலும் சிராஜ்-யை தவிர வேறு வீரர்கள் ரசிகர்களை ஈர்க்கவில்லை. பெங்களூர் அணி இந்த வீரர்களை மட்டுமே நம்பி இருப்பதாலேயே 200 ரன்களுக்கு மேல் அடித்தாலும் லக்னோ, சென்னை ஆகிய அணிகளிடம் தோல்வியை தழுவியது. கே.ஜி.எஃப் வீரர்களை தவிர மற்ற வீரர்களும் அணிக்கு ஏற்றார்போல செயல்பட்டாலே வெற்றி பெற முடியும்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Bangalore, Faf du Plessis, Glenn Maxwell, RCB, Virat Kohli