முகப்பு /செய்தி /விளையாட்டு / ‘ஐபிஎல் தொடரிலிருந்து ரோஹித் சர்மா ஓய்வெடுத்துக் கொள்ள வேண்டும்’ – சுனில் கவாஸ்கர் அட்வைஸ்

‘ஐபிஎல் தொடரிலிருந்து ரோஹித் சர்மா ஓய்வெடுத்துக் கொள்ள வேண்டும்’ – சுனில் கவாஸ்கர் அட்வைஸ்

ரோஹித் சர்மா

ரோஹித் சர்மா

ஆஸ்திரேலிய அணியை இந்தியா எதிர்கொள்ள நிலையில், கேப்டன் ரோஹித் சர்மாவின் விளையாட்டு கவலை அளிக்கும் வகையில் உள்ளது

  • Last Updated :
  • Tamil Nadu, India

ஐபிஎல் தொடரில் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ரோஹித் சர்மா சிறிது காலம் ஓய்வெடுத்தக் கொண்டு, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டிக்கு தயாராக வேண்டும் என்று சுனில் கவாஸ்கர் கூறியுள்ளார். நடப்பு ஐபிஎல் சீசன் முழுவதும் ரோஹித் சர்மா மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். அவரது ஆட்டம் மும்பை அணியின் ரசிகர்களை மட்டுமின்றி இந்திய ரசிகர்கள் அனைவரையும் கவலையில் ஆழ்த்தியுள்ளது.

ஏனென்றால் அடுத்த மாதம் 7 ஆம் தேதி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி லண்டனில் தொடங்கவுள்ளது. இதில் ஆஸ்திரேலிய அணியை இந்தியா எதிர்கொள்ள நிலையில், கேப்டன் ரோஹித் சர்மாவின் விளையாட்டு கவலை அளிக்கும் வகையில் உள்ளது. இதுதொடர்பாக சமூக வலைதளங்களில் ரோஹித் சர்மா மீதான விமர்சனங்கள் குவிந்துள்ளன. இந்நிலையில் டெஸ்ட் அணி கேப்டன் குறித்து கிரிக்கெட் ஜாம்பவான் சுனில் கவாஸ்கர் அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது-

ரோஹித் சர்மாவால் அடுத்த சில ஐபிஎல் போட்டிகளில் மீண்டும் நல்ல ஃபார்முக்கு வர முடியும். ஆனால் அவர் தற்போதைய சூழலில் சிறிது காலம் ஓய்வு எடுத்துக் கொள்ள வேண்டும். அவர் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கான பயிற்சியை தொடங்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியள்ளார். நடப்பு சீசனில் ரோஹித் சர்மா பவர் ப்ளே ஓவர்களுக்குள் 8 முறை ஆட்டமிழந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

First published:

Tags: IPL, IPL 2023