முகப்பு /செய்தி /விளையாட்டு / ‘ப்ளே ஆஃப் செல்ல ஆர்.சி.பி. உதவி செய்வார்கள்’ – ரோஹித் சர்மா நம்பிக்கை

‘ப்ளே ஆஃப் செல்ல ஆர்.சி.பி. உதவி செய்வார்கள்’ – ரோஹித் சர்மா நம்பிக்கை

விராட் கோலி - ரோஹித் சர்மா (ஃபைல் ஃபோட்டோ)

விராட் கோலி - ரோஹித் சர்மா (ஃபைல் ஃபோட்டோ)

கடந்த ஐபிஎல் தொடரின்போது, 69 ஆவது லீக் ஆட்டத்தில் டெல்லி அணியை மும்பை 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் பெங்களூரு அணி ப்ளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறியது குறிப்பிடத்தக்கது.

  • Last Updated :
  • Tamil Nadu, India

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் ப்ளே ஆஃப் சுற்றுக்கு செல்ல ஆர்சிபி உதவி செய்வார்கள் என்று ரோஹித் சர்மா கிண்டலாக கூறியுள்ளார். அவரது இந்த பேட்டி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இன்றுடன் லீக் சுற்றுக்கான போட்டிகள் முடிவுக்கு வருகின்றன. அடுத்த வாரம் ப்ளே ஆஃப் சுற்று தொடங்கவுள்ளது. இதுவரை 69 போட்டிகள் நடத்தி முடிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது பெங்களூரு மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி நடைபெற்று வருகிறது.

பாயின்ட்ஸ் டேபிளில் குஜராத் டைட்டன்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிகள் முதல் 3 இடங்களை பிடித்து ப்ளே ஆஃப் சுற்றுக்கு சென்று விட்டன. ராஜஸ்தான், கொல்கத்தா, பஞ்சாப், டெல்லி மற்றும் ஐதராபாத் அணிகள் தொடரிலிருந்து வெளியேறியுள்ளன. தற்போது நடைபெற்று வரும் பெங்களூரு மற்றும் குஜராத் ஆட்டத்தின் முடிவில் 4 ஆவது இடத்தை பிடிக்கும் அணி எது என்பது தெரிந்து விடும். இந்த போட்டியில் பெங்களூரு அணி வெற்றி பெற்றால் மட்டுமே ப்ளே ஆஃப் சுற்றுக்கு செல்ல முடியும். தோல்வி அல்லது மழை காரணமாக போட்டி கைவிடப்பட்டால் மும்பை அணி ப்ளே ஆஃப் வாய்ப்பை பெறும்.

முன்னதாக இன்று நடைபெற்ற ஐதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் மும்பை அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன்பின்னர் பேட்டியளித்த ரோஹித் சர்மா ப்ளேஆஃப் சுற்று தொடர்பான கேள்விக்கு பதில் அளித்தார். அப்போது அவர் கூறியதாவது- உங்களால் எதைக் கட்டுப்பாட்டுக்குள் வைக்க முடியுமோ அதை மட்டுமே கட்டுப்படுத்த முடியும். மற்றபடி, நமக்கு சிறந்தது கிடைக்கும் என்ற நம்பிக்கை வைக்க வேண்டும். ப்ளே ஆஃப் சுற்றுக்கு எங்களால் செல்ல முடியாவிட்டால் அதனால் நாங்கள் விமர்சிக்கப்படுவோம். சென்றால் அதற்கு எங்கள் அணி வீரர்களே முக்கிய காரணம். கடந்த ஆண்டு ஆர்.சி.பி. அணி ப்ளே ஆஃப் சுற்றுக்கு  செல்ல நாங்கள் பேருதவி செய்தோம். அதற்கான பலன் இப்போது கிடைக்கும் என்று நம்புகிறோம். இவ்வாறு அவர் கூறினார். கடந்த ஐபிஎல் தொடரின்போது, 69 ஆவது லீக் ஆட்டத்தில் டெல்லி அணியை மும்பை 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் பெங்களூரு அணி ப்ளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறியது குறிப்பிடத்தக்கது.

First published:

Tags: IPL, IPL 2023