முகப்பு /செய்தி /விளையாட்டு / ஐபிஎல் 2023 : முதல் வாரத்திலேயே 23 ஸ்பான்சர்கள், 375 கோடி பார்வைகள்- கலக்கும் ஜியோ சினிமாஸ்

ஐபிஎல் 2023 : முதல் வாரத்திலேயே 23 ஸ்பான்சர்கள், 375 கோடி பார்வைகள்- கலக்கும் ஜியோ சினிமாஸ்

ஜியோ சினிமாஸ்

ஜியோ சினிமாஸ்

கடந்த ஆண்டை ஒப்பிடும் போதும் நடப்பாண்டு ஐபிஎல் போட்டிகளில் டிஜிட்டல் பார்வையாளர்கள் கணிசமாக அதிகரித்துள்ளது.

  • Last Updated :
  • Maharashtra, India

2023 ஐபிஎல் திருவிழாவின் அதிகாரப்பூர்வ ஸ்ட்ரீமிங் பார்ட்னரான ஜியோசினிமா, தொடரின் தனது முதல் வாரத்திலேயே 23 விளம்பர ஸ்பான்சர்களை ஈர்த்து ஒப்பந்தம் செய்து சாதனை படைத்துள்ளது. இதுவரை நடைபெற்ற எந்த நிகழ்வுகளுக்கும் இல்லாத அளவிற்கு அதிக அளவிலான விளம்பரதாரர்கள் மற்றும் ஸ்பான்சர்களை ஜியோ சினிமா இந்தாண்டு ஒப்பந்தம் செய்துள்ளது.

2023 ஐபிஎல் டிஜிட்டல் ஸ்ட்ரீமிங் தளமான ஜியோ சினிமா டிரீம் 11, ஜியோ மார்ட், போன்பே, டியாகோ இவி, அப்பி பிஸ், இடி மனி, கேஸ்ட்ரால், டிவிஎஸ், ஓரியோ, பிங்கோ, ஸ்டிங், ஏஜியோ, ஹேயர், ரூபே, லூயிஸ் பிலிபே ஜீன்ஸ், அமேசான், ரேபிடோ, அல்ட்ரா டெக் சிமென்ட், பூமா, கம்லா பசந்த், கிங்க்பிஷர் பவர் சோடா, ஜிந்தால் பேந்தர் டிஎம்டி ரேபார் மற்றும் இன்டீட் ஆகியோரை ஸ்பான்சர்களாக கொண்டுள்ளது.

ஜியோ சினிமாவில் ஒப்பந்தம் பதிவு செய்த விளம்பரதாரர்களின் எண்ணிக்கையும் ஒரு புதிய சாதனையாகும். டிஜிட்டல் தளத்தில் விளம்பர வருவாயும் கடந்த ஆண்டை விட கணிசமாக அதிகரித்துள்ளது. போஜ்புரி, பஞ்சாபி, மராத்தி மற்றும் குஜராத்தி உள்ளிட்ட பிராந்திய மொழியில் சேவை வழங்குகிறது. மல்டி-கேம், 4K மற்றும் ஹைப் மோட் போன்ற டிஜிட்டல்-ஒன்லி அம்சங்களையும் பார்வையாளர்கள் அனுபவிப்பதால், டிஜிட்டல் அலைவரிசையில் சேரும் பிராண்டுகளின் பட்டியல் மேலும் வளரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஜியோ சினிமாவின் ரசிகர்களை மையமாகக் கொண்ட விளக்கக்காட்சியில் பார்வையாளர்கள் ஈர்க்கப்பட்டனர். ஏனெனில் ஒரு போட்டிக்கு ஒரு பார்வையாளரின் சராசரி நேரம் வார இறுதியில் 57 நிமிடங்களைத் தொட்டது. இது கடந்த சீசனின் முதல் வார இறுதியுடன் ஒப்பிடும்போது 60% அதிகமாகும்.

இது தொடர்பாக Viacom18-விளையாட்டு பிரிவு சிஇஓ அணில் ஜெயராஜ் கூறுகையில், இந்தியாவில் விளையாட்டை பார்க்கும் பார்வையாளர்களின் எண்ணிக்கையில் ஏற்பட்டுள்ள மாபெரும் மாற்றத்தை இந்த புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன. எங்கள் ஸ்பான்சர்கள் மற்றும் விளம்பரதாரர்கள் டிஜிட்டல் மூலம் ஜியோ சினிமாவில் டெலிவரி மற்றும் முதலீட்டின் மீதான வருமானம் குறித்து உறுதியான நம்பிக்கை கொண்டுள்ளனர் என்றார்.

டிவி விளம்பரங்களை விட ஜியோசினிமாவில் விளம்பரம் செய்வது அதிக துல்லியம், செலவு-செயல்திறன் மற்றும் நெகிழ்வுத்தன்மை ஆகியவை பிராண்டுகளுக்கு வழங்குகின்றன. அதனால்தான் அதிகமான விளம்பரதாரர்கள் டிஜிட்டலை நோக்கி தங்கள் கவனத்தையும் பட்ஜெட்டையும் மாற்றுவார்கள் என்று நாங்கள் நம்புகிறோம் என அவர் கூறியுள்ளார்.

ஜியோசினிமா இலவச ஸ்ட்ரீமிங் மூலம் 2023 ஐபிஎல் முதல் வாரத்தில் அகில இந்திய அளவில் பார்வையாளர்கள் எண்ணிக்கை 375 கடந்து பெரும் சாதனை படைத்துள்ளது. முதல் வார இறுதி நாள்களில் மட்டும் 147 கோடி பேர் போட்டிகளை ஜியோசினிமாவில் பார்த்துள்ளனர்.

ஜியோசினிமாவில் எம்எஸ் தோனியின் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ஹர்திக் பாண்டியாவின் குஜராத் டைட்டன்ஸ் இடையேயான சீசன்-தொடக்க மோதலின் பார்வையாளர்களின் எண்ணிக்கை 1.6 கோடி என்ற உச்சத்தை எட்டியது. அத்துடன் இந்த காலகட்டத்தில் ஜியோசினிமா செயலியை 2.5 கோடிக்கும் மேல் பதிவிறக்கங்கள் செய்யப்பட்டு, ஒரே நாளில் அதிகம் இன்ஸ்டால் செய்த செயலிக்கான சாதனை படைத்துள்ளது.

இதையும் படிங்க: IPL 2023 : அடுத்த மேட்ச்சில் இடம்பெறுவார்களா பென் ஸ்டோக்ஸ், தீபக் சஹார்? – அப்டேட் வெளியிட்ட சி.எஸ்.கே.

அத்துடன் பார்வையாளர்களை மேலும் ஊக்கப்படுத்தும் விதமாக ஜியோ தன்தனா தன் என்ற புதிய போட்டியை அறிமுகப்படுத்தியுள்ளது. ஒவ்வொரு ஐபிஎல் போட்டிகளின் போதும் இதில் பங்கேற்று அதிர்ஷ்டம் கொண்ட பார்வையாளர் ஒருவருக்கு கார் பரிசாக வழங்கப்படும். முதல் இரு ஐபிஎல் போட்டிகளில் இந்த தன்தனா தன் போட்டிகளை 1.5 கோடி பேர் விளையாடியுள்ளனர்.

top videos

    நடப்பு சாம்பியன் குஜராத் டைடான்ஸ், 5 முறை சாம்பியன்ஸ் மும்பை இந்தியன்ஸ், ஆர்சிபி, டெல்லி கேப்பிடஸ் ஆகிய அணிகள் ஜியோசினிமாவுடன் எக்ஸ்குளூசிவ் பார்ட்னர்ஷிப் செய்துள்ளன. கிரிக்கெட் உலகின் ஜாம்பவான் சச்சின், இந்திய ரசிகர்களால் பெரிதும் கொண்டாடும் நட்சத்திரம் எம்எஸ் தோனி, நம்பர் 1 டி20 பேட்ஸ்மேன் சூர்யகுமார் யாதவ், இந்திய பெண்கள் அணியின் துணை கேப்டன் ஸ்மிரிதி மந்தானா ஆகியோரும் ஜியோ சினிமாவுடன் கைகோர்த்துள்ளனர்.

    First published:

    Tags: IPL 2023, Jio