முகப்பு /செய்தி /விளையாட்டு / IPL 2023 : ஆர்.சி.பி.-க்கு எதிரான ஆட்டத்தில் சென்னை அணி முதலில் பேட்டிங்!!

IPL 2023 : ஆர்.சி.பி.-க்கு எதிரான ஆட்டத்தில் சென்னை அணி முதலில் பேட்டிங்!!

ஃபாஃப் டூப்ளசிஸ் - தோனி

ஃபாஃப் டூப்ளசிஸ் - தோனி

ஐபிஎல் பாயின்ட்ஸ் டேபிளில் சென்னை அணி 6 ஆவது இடத்திலும், பெங்களூரு அணி 7 ஆவது இடத்திலும் உள்ளன.

  • Last Updated :
  • Tamil Nadu, India

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகளுக்கு இடையிலான ஆட்டம் தற்போது தொடங்கியுள்ளது. இதில் டாஸ் வென்ற பெங்களூரு அணியின் கேப்டன் டூப்ளசிஸ் பவுலிங்கை தேர்வு செய்துள்ளார். இதையடுத்து சென்னை அணியின் பேட்ஸ்மேன்கள் களத்தில் இறங்கவுள்ளனர். பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் இந்த போட்டி தொடங்கியுள்ளது. ஐபிஎல் பாயின்ட்ஸ் டேபிளில் சென்னை அணி 6 ஆவது இடத்திலும், பெங்களூரு அணி 7 ஆவது இடத்திலும் உள்ளன.

பெங்களூரு அணியில் விளையாடும் வீரர்கள்- விராட் கோலி, ஃபாஃப் டு பிளெசிஸ்(கேப்டன்), மஹிபால் லோம்ரோர், கிளென் மேக்ஸ்வெல், ஷாபாஸ் அகமது, தினேஷ் கார்த்திக்(விக்கெட் கீப்பர்), ஹர்ஷல் படேல், வனிந்து ஹசரங்கா, வெய்ன் பார்னல், விஜய்குமார் வைஷாக், முகமது சிராஜ். சென்னை அணியில் விளையாடும் வீரர்கள் - டெவோன் கான்வே, ருதுராஜ் கெய்க்வாட், அஜிங்யா ரஹானே, மொயீன் அலி, அம்பதி ராயுடு, ஷிவம் துபே, ரவீந்திர ஜடேஜா, எம்எஸ் தோனி(கேப்டன்-விக்கெட் கீப்பர்), மதீஷா பத்திரனா, துஷார் தேஷ்பாண்டே, மஹீஷ் தீக்ஷனா.

முன்பு இரு அணிகளும் 30 போட்டிகளில் மோதியுள்ளன. இதில் சென்னை அணி 19 முறையும், பெங்களூரு அணி 10 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளது. ஒரு போட்டியில் முடிவு ஏதும் அறிவிக்கப்படவில்லை. இதன் அடிப்படையில் சென்னை அணி 65.5% வெற்றி சதவீத்தை பெற்றுள்ளது. கடைசியாக இரு அணிகளும் மோதிய ஆட்டத்தில் பெங்களூரு அணி 13 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

ஆர்.சி.பி. அணிக்கு எதிராக தோனி அதிக ரன்களை குவித்துள்ளார். 27 இன்னிங்ஸ்களில் விளையாடியுள்ள அவர் 739 ரன்களை எடுத்துள்ளார். சராசரி 43.47 ரன்னாக உள்ளது. மேலும், பெங்களூரு அணிக்கு எதிராக 4 அரைச்சதங்களை அடித்துள்ள தோனியின் அதிகபட்ச ஸ்கோர் 84 ரன்களாகும்.

சென்னை அணிக்கு எதிராக 30 ஆட்டங்களில் விளையாடியுள்ள விராட் கோலி 979 ரன்களை எடுத்துள்ளார். சராசரி 39.16 ரன்கள். இவற்றில் 9 அரைச்சதங்கள் அடங்கும். அதிகபட்ச ஸ்கோர் 90 ரன்கள். முன்பு சென்னை அணிக்காக விளையாடிய ஃபாஃப் டூப்ளசிஸ் தற்போது பெங்களூரு அணியின் கேப்டனாக செயல்பட்டு வருகிறார். அவர் பேட்ஸ்மேனாக நல்ல ஃபார்மில் இருப்பது அணிக்கு பலம் சேர்க்கிறது.

First published:

Tags: IPL, IPL 2023