முகப்பு /செய்தி /விளையாட்டு / IPL 2023 : பெங்களூரு அணி வெற்றி பெற 172 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது மும்பை இந்தியன்ஸ்…

IPL 2023 : பெங்களூரு அணி வெற்றி பெற 172 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது மும்பை இந்தியன்ஸ்…

திலக் வர்மா

திலக் வர்மா

5 ஓவரில் 4 விக்கெட்டுகளை இழந்து 48 ரன்கள் மட்டுமே எடுத்து மும்பை அணி தடுமாறிக் கொண்டிருந்தது.

  • Last Updated :
  • Tamil Nadu, India

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் பெங்களூரு – மும்பை அணிகளுக்கு இடையிலான ஆட்டத்தில் பெங்களூரு அணி வெற்றி பெற மும்பை 172 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. இந்த போட்டியில் டாஸ் வென்ற பெங்களூரு அணி பந்து வீச்சை முதலில் தேர்வு செய்தது.இதையடுத்து மும்பை அணியின் பேட்ஸ்மேன்கள் விளையாடத் தொடங்கினர். கேப்டன் ரோஹித் சர்மா10 பந்துகளை எதிர்கொண்டு 1 ரன் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தார். அதிரடி ஆட்டக்காரர் இஷான் கிஷன் 10 ரன்கள் மட்டுமே எடுத்து வெளியேறினார். மிகவும் எதிர்பார்க்கப்பட்ட கேமரூன் க்ரீனால் 5ரன் மட்டுமே எடுக்க முடிந்தது. சூர்யசுமார்யாதவ் 15 ரன்னில் வெளியேற, தொடர்ந்து அதிரடியாக விளையாடிய திலக் வர்மா 84 ரன்கள் குவித்து கடைசி வரை களத்தில் நின்றார். 8.5 ஓவரில் 4 விக்கெட்டுகளை இழந்து 48 ரன்கள் மட்டுமே எடுத்து மும்பை அணி தடுமாறிக் கொண்டிருந்தது.

இதன் பின்னர் இணைந்த திலக் வர்மா நெஹல் வதேரா இணை சரிவை மீட்டெடுத்தது. இருவரும் 5 ஆவது விக்கெட்டிற்கு 50 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். நெஹல் வதேரா21 ரன்னும், டிம் டேவிட் 4 ரன்னும் எடுத்து ஆட்டமிழக்க அர்ஷத் கான் 15 ரன்கள் எடுத்தார்.

20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்த மும்பை அணி 171 ரன்களை குவித்துள்ளது. பெங்களூரு அணி தரப்பில் கரன்சர்மா அதிகபட்சமாக 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். தற்போது 172 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி பெங்களூரு அணியினர் விளையாடி வருகின்றனர்.

First published:

Tags: IPL, IPL 2023