ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் பெங்களூரு அணிக்கு எதிராக போட்டியில் லக்னோ அணி ஒரு விக்கெட் வித்தியாசத்தில் த்ரில் வெற்றிபெற்றது.
ஐபிஎல் கிரிக்கெட்டில் சின்னசாமி மைதானத்தில் ஆர்.சி.பி - லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் மோதியது. விராட் கோலி அரைசதம், இறுதியில் டுபிளிசிஸ் - மேக்ஸ்வெல் மிரட்டல் என எல்லாமே நல்லாத்தான் போனது. ஆர்சிபி 20 ஓவர் 2 விக்கெட் இழந்து 212 ரன்கள் எடுத்தது. பெங்களூரு ரசிகர்கள் உற்சாகத்தில் திளைத்தனர்.
ஆர்.சி.பி பந்துவீச்சாளர்கள் ஆரம்பத்தில் விக்கெட் வேட்டை நடத்தினர். 213 ரன்களை விரட்டிய லக்னோ 23 ரன்களுக்கு 3 விக்கெட் இழந்து தள்ளாடியது. டி20யில் எதுவும் நடக்கும் என்பதுபோல் அடுத்த வந்த மார்கஸ் ஸ்டோனிஸ் - நிகோலஸ் பூரன் ஜோடி அதிரடியில் மிரட்டினர். பெங்களூரு பந்துவீச்சை துவம்சம் செய்தனர். இந்த ஜோடி லக்னோவை வெற்றிப்பாதைக்கு அழைத்து சென்றது. கடைசி பந்து வரை சென்ற இந்த போட்டியில் லக்னோ த்ரில் வெற்றி பெற்றது.
Also Read: சிஎஸ்கே-வில் ரஹானே.. தோனி என்ன லாஜிக் இது - சேவாக் விளாசல்
இந்த போட்டியில் இரண்டாவதாக பந்துவீசிய பெங்களூரு அணி பந்துவீச அதிக நேரம் எடுத்துக்கொண்டதை சுட்டிக்காட்டியுள்ள ஐபிஎல் நிர்வாகம் டூப்ளிசிக்கு அபராதம் விதித்துள்ளது. பெங்களூரு அணி கேப்டன் டூப்ளிஸ்சிக்கு ஐபிஎல் நிர்வாகம் 12 லட்சம் ரூபாய் அபராதம் விதித்துள்ளது. இதேபோல் கடைசி பந்தில் ஒரு ரன் எடுத்து வெற்றிக்கு உதவிய அவேஷ் கான், தலைக்கவசத்தை தரையில் வீசி உற்சாகத்தை வெளிப்படுத்தினார். அதுவும் விதிமீறல் என்பதால் அவருக்கும் ஐபிஎல் நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 46, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Cricket, Faf du Plessis, RCB