முகப்பு /செய்தி /விளையாட்டு / ‘இந்திய அணியில் விரைவில் இடம்பெறுவார்’ – ஐபிஎல் தொடரில் கலக்கும் இளம் வீரருக்கு ரவி சாஸ்திரி வாழ்த்து

‘இந்திய அணியில் விரைவில் இடம்பெறுவார்’ – ஐபிஎல் தொடரில் கலக்கும் இளம் வீரருக்கு ரவி சாஸ்திரி வாழ்த்து

ரவி சாஸ்திரி

ரவி சாஸ்திரி

ஐபிஎல் கிரிக்கெட் தொடர் பல திறமை மிக்க வீரர்களை அறிமுகம் செய்துள்ளது. சூர்யகுமார் யாதவ், இஷான் கிஷன், ஹர்திக் பாண்ட்யா, அக்சர் படேல் உள்ளிட்டோர் அவர்களில் குறிப்பிடத்தக்கவர்கள்.

  • Last Updated :
  • Tamil Nadu, India

ஐபிஎல் தொடரில் கலக்கி வரும் இளம் வீரர் விரைவில் இந்திய அணியில் இடம்பெறுவார் என்று இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளரும், வர்ணனையாளருமான ரவி சாஸ்திரி வாழ்த்தியுள்ளார். ஐபிஎல் கிரிக்கெட் தொடர் ஏராளமான திறமை மிக்க வீரர்கள் இந்தியா முழுவதும் அறிமுகப்படுத்தியுள்ளது. ஹர்திக் பாண்ட்யா, சூர்யகுமார் யாதவ், அக்சர் படேல், ரவிந்திரா ஜடேஜா உள்ளிட்ட வீரர்கள் ஐபிஎல் தொடர் மூலமாக கவனம் பெற்றனர். நடப்பு ஐபிஎல் சீசனில் ராஜஸ்தான் அணியின் யஷஸ்வி ஜெய்ஸ்வால், மும்பை அணியின் நெஹல் வதேரா, கொல்கத்தாவின் ரின்கு சிங், நிதிஷ் ராணா உள்ளிட்ட வீரர்கள் ரசிகர்கள் மற்றும் கிரிக்கெட் வல்லுனர்களின் பாராட்டுக்களை பெற்றுள்ளனர்.

அவர்களில் ராஜஸ்தான் அணியின் இளம் வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் முன்னிலையில் இருக்கிறார். 21 வயதே ஆகும் யஷஸ்வி ஜெய்ஸ்வால் தனது அதிரடி பேட்டிங்கின் மூலம் பாராட்டுக்களை குவித்து வருகிறார். இந்த தொடரில் 12 போட்டிகளில் விளையாடியுள்ள அவர் 575 ரன்கள் குவித்துள்ளார். சராசரி 52.27 ரன்னாகவும், ஸ்ட்ரைக் ரேட் 167 ஆகவும் உள்ளது. மேலும் ஒரு சதம் மற்றும் 4 அரைச்சதங்களை இந்த ஐபிஎல் தொடரில் யஷஸ்வி பதிவு செய்துள்ளார்.

ரோஹித் சர்மாவுடன் யஷஸ்வி ஜெய்ஸ்வால்

top videos

    இந்நிலையில் யஷஸ்வியின் பேட்டிங் குறித்து ரவி சாஸ்திரி அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது- இந்திய கிரிக்கெட் அணியின் தேர்வாளர்கள் யஷஸ்வி ஜெய்ஸ்வாலின் ஆட்டத்தை உன்னிப்பாக கவனித்து வருகின்றனர். அவர் விரைவில் இந்திய அணிக்காக விளையாடுவார். அவரது ஆட்டத்தில் அபாரமான ஆற்றல் இருக்கிறது. குறிப்பாக அவர் பந்துகளை அடிக்கும் நேரம் துல்லியமாக இருக்கிறது. யஷஸ்வி ஜெய்ஸ்வாலின் எதிர்காலம் பிரகாசமாக உள்ளது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    First published:

    Tags: IPL, IPL 2023